search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    போர் நினைவிடத்தில் கவர்னர் தமிழிசை முதல்-அமைச்சர் ரங்கசாமி அஞ்சலி
    X

    புதுவை போலீஸ் டிஜிபி ஸ்ரீநிவாசுக்கு கவர்னர் தமிழிசை, முதல்- அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் பூங்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.

    போர் நினைவிடத்தில் கவர்னர் தமிழிசை முதல்-அமைச்சர் ரங்கசாமி அஞ்சலி

    • டி.ஜி.பி. கவுரவிப்பு
    • டி.ஜி.பி. ஸ்ரீனிவாஸ் கார்கில் போரின்போது ஐம்மு காஷ்மீர் மாநிலத்தில் கார்கில் மாவட்டத்தில் முதநிலை கண்காணிப்பாளராக பணியாற்றினார்.

    புதுச்சேரி:

    கடந்த 1999-ம் ஆண்டு பாகிஸ்தான் ராணுவத்தினர் அப்போதைய ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கார்கில் பகுதியில் ஊடுருவி ஆக்கிரமிப்பு செய்தனர்.

    இதனால் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையில் கடுமையான போர் மூண்டது. கார்கில் பகுதியை மீட்க 'விஜய் நடவடிக்கை' என்கிற பெயரில் பாகிஸ்தான் ராணுவத்தை இந்திய ராணுவம் விரட்டியடித்தது. மலைத் தொடரில் மிகுந்த சவால்களை எதிர்கொண்டு நடந்த போரில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா வென்றது.

    போரில் 100-க்கணக்கான இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்தனர், போரில் வென்றதை நினைவுகூரும் விதமாகவும் போரில் உயிர்நீத்த இந்திய ராணுவ வீரர்களை நினைவு கூறும் விதமாக ஆண்டு தோறும் ஜூலை 26-ந் தேதி கார்கில் போர் வெற்றி தினமாக அனுசரிக்கப்படுகிறது.

    கார்கில் வெற்றி தினம் புதுவை கடற்கரை சாலையில் உள்ள கார்கில் போர் நினைவிடத்தில் இன்று நடந்தது. நிகழ்வில் கவர்னர் தமிழிசை, முதல்-அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம், துணை சபாநாயகர் ராஜவேலு, அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமிநாராயணன் உள்ளிட்ட உயரதிகாரிகள், முப்படையை சேர்ந்த அதிகாரிகள் மற்றும் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் ஆகியோர் பங்கேற்று போர் வீரர்கள் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து போரில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்,

    புதுவையில் புதிதாக பொறுப் பேற்றுள்ள டி.ஜி.பி. ஸ்ரீனிவாஸ் கார்கில் போரின்போது ஐம்மு காஷ்மீர் மாநிலத்தில் கார்கில் மாவட்டத்தில் முதநிலை கண்காணிப்பாளராக பணியாற்றினார். அப்போது போரில் காயமடைந்த ராணுவ வீரர்களை மீட்டு மருத்துவ உதவிகளை செய்தார்.

    இதனை பாராட்டி கவர்னர் தமிழிசை, முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆகியோர் டி.ஜி.பி. ஸ்ரீநிவாசை கவுரவித்தார்கள். ஏ.கே.டி.ஆறுமுகம், கே.எஸ்.பி. ரமேஷ், பாஸ்கர், லட்சுமிகாந்தன், வெங்கடேசன், வி.பி. ராமலிங்கம், அசோக்பாபு, தலைமைச்செயலர் ராஜீவ்வர்மா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    தொடர்ந்து முதல்-அமைச்சர் ரங்கசாமி கூறியதாவது:-

    நமது நாட்டுக்கு பெருமை சேர்த்த போர்ப்படை வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் கார்கில் வெற்றி தினம் நடந்தது. வெற்றிக்கு வழித் தேடி தந்த டி.ஜி.பி. இங்கு இருப்பது மகிழ்ச்சி. போரில் ஈடுபட்ட வெற்றி தேடி தந்த அனைத்து வீரர்களுக்கும் பாராட்டும் வாழ்த்துகள்" என்றார்.

    Next Story
    ×