search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    இலவச கண் சிகிச்சை முகாம்
    X

    இலவச கண் சிகிச்சை முகாமை யுவர் பேக்கர்ஸ் நிறுவனர் கிருஷ்ணராஜூ தொடங்கி வைத்து பார்வையிட்ட காட்சி.

    இலவச கண் சிகிச்சை முகாம்

    • அரியாங்குப்பத்தில் உள்ள சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்க சமுதாய நலக்கூடத்தில் நடத்தியது.
    • இந்த முகாமில் கண் சம்பந்தப்பட்ட அனைத்து பரிசோதனைகளும் இலவசமாக செய்யப்பட்டது.

    புதுச்சேரி:

    அரியாங்குப்பம் வள்ளலார் சபை மற்றும் புதுவை முதன்மை கண் சிகிச்சை நிபுணர் டாக்டர் தமிழ்வாணன் ஆகியோர் இணைந்து இலவச கண் சிகிச்சை முகாமை அரியாங்குப்பத்தில் உள்ள சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்க சமுதாய நலக்கூடத்தில் நடத்தியது.

    யுவர் பேக்கர்ஸ் நிறுவனர் கிருஷ்ணராஜூ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார். இந்த முகாமில் கண் சம்பந்தப்பட்ட அனைத்து பரிசோதனைகளும் இலவசமாக செய்யப்பட்டது.

    மேலும் இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். இந்த இலவச முகாமிற்கான ஏற்பாடுகளை யுவர் பேக்கர்ஸ் முருகன், பிரகாஷ், அகிலன் மற்றும் நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.

    Next Story
    ×