search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    முன்னாள் எம்.பி. ராமதாஸ் புதுக்கட்சி தொடங்கினார்
    X

    கோப்பு படம்.

    முன்னாள் எம்.பி. ராமதாஸ் புதுக்கட்சி தொடங்கினார்

    • 2-வது விடுதலை பெற வேண்டிய நிலையில் உள்ளோம்.
    • புதுவை மக்களுக்கு இந்த 2 வித விடுதலையை பெற்றுத் தருவதுதான் புதிய கட்சியின் நோக்கம்.

    புதுச்சேரி:

    புதுவை முன்னாள் எம்.பி. பேராசிரியர் ராமதாஸ் புதுவை மாநில மக்கள் முன்னேற்றக்கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ளார்.

    இதன் தொடக்கவிழா புதுவையின் விடுதலைக்கு வாக்கெடுப்பு நடந்த கீழூரில் நடந்தது. முன்னாள் எம்.பி. ராமதாஸ் தலைமை வகித்தார். வெங்கட்ராமன் வரவேற்றார்.

    தாகூர் கலைக் கல்லூரி முன்னாள் முதல்வர் ராஜவன், முதன்மை பொறியாளர் ரவி, பேராசிரியை செல்வகுமாரி, எல்.ஐ.சி. வளர்ச்சி அதிகாரி ரகோத்தமன் வாழ்த்தி பேசினர்.

    முன்னாள் எம்.பி. ராமதாஸ் கட்சியின் கொடியை அறிமுகப்படுத்தி பேசியதாவது:-

    புதுவைக்கு 2-வது விடுதலை பெற வேண்டிய நிலையில் உள்ளோம்.

    மத்திய அரசிடமிருந்தும், மாநில அரசிடமிருந்தும் விடுதலை கிடைக்க வேண்டியுள்ளது. மாநில அந்தஸ்து கிடைக்கும்போது தான் மத்தியிலிருந்து விடுதலை கிடைக்கும்.

    சமூகநீதியோடு கூடிய விரைவான வளர்ச்சியை உருவாக்கி பெரும்பாலான மக்கள் மகிழ்ச்சியில் வாழும் போதுதான் புதுவை அரசிலிருந்து விடுதலை கிடைக்கும். புதுவை மக்களுக்கு இந்த 2 வித விடுதலையை பெற்றுத் தருவதுதான் புதிய கட்சியின் நோக்கம்.

    இவ்வாறு ராமதாஸ் பேசினார்.

    சிவராந்தகம் கிராம பஞ்சாயத்து தலைவர் பரந்தாமன் நன்றி கூறினார்.

    Next Story
    ×