என் மலர்
புதுச்சேரி

மும்பை பள்ளி மாணவர்களுக்கு களிமண் பொம்மை செய்வது குறித்து டெரகோட்டா கலைஞர் முனுசாமி பயிற்சி அளித்த காட்சி.
மும்பை பள்ளி மாணவர்களுக்கு களிமண் பொம்மை செய்ய பயிற்சி
- தற்போது அழிவின் விளிம்பில் உள்ள இந்த கலையை மீட்டெடுக்கும் முயற்சியில் டெரகோட்டா கலைஞர் பத்மஸ்ரீ முனுசாமி ஈடுபட்டுள்ளார்.
- களி மண்ணை கையால் தொட்டு விநாயகர், குதிரை, மான், மயில், பூ போன்றவை தயாரிப்பது குறித்து ஆர்வத்துடன் பயின்றனர்.
புதுச்சேரி:
டெரகோட்டா எனப்படும் சுடு களிமண் பொம்மை தமிழ் பாரம்பரியத்தில் வெளிப்பாடாக உள்ளது.
புதுவை கிராமங்களில் பெருமளவில் இந்த பொம்மைகள் செய்யப்பட்டு வந்தன. தற்போது அழிவின் விளிம்பில் உள்ள இந்த கலையை மீட்டெடுக்கும் முயற்சியில் டெரகோட்டா கலைஞர் பத்மஸ்ரீ முனுசாமி ஈடுபட்டுள்ளார். இதற்காக திருக்காஞ்சி கிராமத்தில் மத்திய-மாநில அரசின் வழிகாட்டுதலோடு டெரகோட்டா பயிற்சி மையத்தை நடத்தி வருகிறார்.
இந்த மையத்துக்கு வெளிநாட்டினர் குழுவாக வந்து பார்வையிட்டு பயிற்சி பெற்று செல்கின்றனர். தற்போது மும்பையை சேர்ந்த சர்வதேச தனியார் பள்ளியை சேர்ந்த 54 மாணவர்கள் இங்கு வந்து களிமண் பொம்மைகளை செய்வதை ஆர்வத்துடன் பயின்று வருகின்றனர். களி மண்ணை கையால் தொட்டு விநாயகர், குதிரை, மான், மயில், பூ போன்றவை தயாரிப்பது குறித்து ஆர்வத்துடன் பயின்றனர்.
வளரும் தலை முறைகளுக்கு இது போன்ற பயிற்சி அளிப்பதால் அழிவின் விளிம்பில் உள்ள இந்த கலை பாதுகாக்கப்படும். அனைத்து பள்ளிகளிலும் இதை ஒரு கலையாக கொண்டுவர வேண்டும். அமெரிக்காவில் குரு குலப்பள்ளியில் உள்ளது போல் இந்தியாவிடம் குருகுல கல்வி முறையில் இதை பயிற்று தர வேண்டும் என பத்மஸ்ரீ முனுசாமி தெரிவித்துள்ளார்.






