என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்.
புனித ஆரோக்கிய அன்னை ஆலய கொடியேற்றம்
- அன்னை ஆலயத்தில் 333 ஆண்டு ஆடம்பரத் தேர் பவனி வருகின்ற 10-ம் தேதி நடக்கிறது.
- புதுவை வட்டார முதன்மை குரு ரொசாரியோ சிறப்பு அழைப்பாக கலந்து கொண்டு திருப்பலி நிறைவேற்றுகிறார்.
புதுச்சேரி:
அரியாங்குப்பம் புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் 333 ஆண்டு ஆடம்பரத் தேர் பவனி வருகின்ற 10-ம் தேதி மாலை நடக்கிறது. அதனை முன்னிட்டு நாளை காலை 6 மணி அளவில் திருப்பலி நடைபெற்று கொடியேற்றம் நடக்கிறது.
இதில் புதுவை வட்டார முதன்மை குரு ரொசாரியோ சிறப்பு அழைப்பாக கலந்து கொண்டு திருப்பலி நிறைவேற்றுகிறார். பங்குத்தந்தை அந்தோணிரோச் தலைமை தாங்குகிறார்.
இந்த நிகழ்ச்சியில் அரியாங்குப்பம் பங்கு நிர்வாக குழு பொறுப்பாளர்கள் லூர்துசாமி, அந்தோணிராஜ், மில்கி, பங்கு மக்கள், தன்னார்வலர்கள் குழு உள்ளிட்ட பொதுமக்கள் பலர் கலந்து கொள்கிறார்கள்.
Next Story






