search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்கம்
    X

    கல்லூரி முதல்வர் மலர்க்கண் வரவேற்று பேசிய காட்சி. 

    மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்கம்

    • விழாவுக்கு கல்லூரி தலைவரும் நிர்வாக இயக்குன ருமான தனசேகரன் தலைமை தாங்கினார்.
    • நாட்டு நலப்பணித் திட்டத்தில் சிறப்பாக சேவை யாற்றிய மாணவர்களுக்கு விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

    புதுச்சேரி:

    மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் பி.டெக் மாணவர்களின் 1-ம் ஆண்டு துவக்க விழாநடைபெற்றது. விழாவுக்கு கல்லூரி தலைவரும் நிர்வாக இயக்குன ருமான தனசேகரன் தலைமை தாங்கினார்.

    செயலாளர் நாராயண சாமி, பொருளாளர் ராஜ ராஜன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கி னர். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, தொழில் ஆலோசகர் மற்றும் ஆய்வாளர் ஜெயபிரகாஷ் காந்தி பேசியதாவது:-

    புதிய தொழில்நுட்ப வளர்ச்சிகளை மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். மாணவர்கள் தங்கள் தொழில் கல்வியுடன் பிற மொழிகளை யும் கற்பது அவசியம், சமூக வலைத்தளங்களை மாண வர்கள் முறையாக பயன்படுத்த வேண்டும். மாணவர்களின் ஒழுக்கம், நன்னடத்தையு டன் இருக்க வேண்டும். எதிர்கால தொழில்நுட்பம், வேலை வாய்ப்பு மாற்றங்கள் மற்றும் அதற்காக தங்களை தயார்படுத்தி கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கல்லூரி முதல்வர் மலர்க்கண் வரவேற்று பேசினார். கல்லூரி தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் தனசேகரன், செயலாளர் டாக்டர் நாராயணசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

    விழாவில் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்கள், கல்லூரியின் முன்னாள் சாதனை மாணவர்கள் மற்றும் நாட்டு நலப்பணித் திட்டத்தில் சிறப்பாக சேவை யாற்றிய மாணவர்களுக்கு விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

    முடிவில் பேராசிரியர் சுமித்ரா நன்றி கூறினார்.

    Next Story
    ×