என் மலர்
புதுச்சேரி

புதுவை விவேகானந்தா மேல்நிலைப் பள்ளியில் எக்ஸாம் வாரியர் என்ற தலைப்பில் நடந்த ஓவியப் போட்டியை பள்ளி தாளாளர் செல்வகணபதி எம்.பி. தொடக்கி வைத்த காட்சி.
எக்ஸாம் வாரியர் ஓவியப்போட்டி
- புதுவை விவேகானந்தா மேல்நிலைப் பள்ளியில் எக்ஸாம் வாரியர் என்ற தலைப்பில் ஓவியப்போட்டி நடைபெற்றது.
- இதன் தொடக்கமாக விவேகானந்தா மேல்நிலைப் பள்ளியில் எக்ஸாம் வாரியர் என்ற தலைப்பில் மாணவர்களுக்கான ஓவியப் போட்டி நடந்தது.
புதுச்சேரி:
புதுவை விவேகானந்தா மேல்நிலைப் பள்ளியில் எக்ஸாம் வாரியர் என்ற தலைப்பில் ஓவியப்போட்டி நடைபெற்றது.
பொதுத்தேர்வின் போது மாணவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம் நீங்கவும், மாணவர்கள் நல்ல உடல் நிலை மற்றும் மனநிலையுடன் தேர்வு எழுதி சான்றோனாக உருவாக பிரதமர் மோடி பரிக் ஷா பி சர்ச்சா என்ற திட்டத்தை நாடு முழுவதும் அறிமுகப் படுத்தியுள்ளார்.
இதன் தொடக்கமாக விவேகானந்தா மேல்நிலைப் பள்ளியில் எக்ஸாம் வாரியர் என்ற தலைப்பில் மாணவர்களுக்கான ஓவியப் போட்டி நடந்தது. இதில் பொதுத் தேர்வு எழுதவுள்ள 500 மாணவர்கள் பங்கேற்றனர்.
போட்டியை பள்ளி தாளாளரான செல்வகணபதி எம்.பி. தொடக்கி வைத்தார். பள்ளியின் முதன்மை முதல்வர் பத்மா, பள்ளி முதல்வர் கீதா ஆகியோர் கலந்து கொண்டனர்.






