search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    கைப்பந்து மைதானத்திற்கு மின் விளக்குகள்
    X

    கைப்பந்து மைதானத்துக்கு மின் விளக்குகளை ரவி பாண்டு ரங்கன் வழங்கிய காட்சி.

    கைப்பந்து மைதானத்திற்கு மின் விளக்குகள்

    • அரியாங்குப்பம் தொகுதிக்குட்பட்ட ஆர்.கே.நகர் பகுதியில் பாரதியார் கைப்பந்து போட்டி நடக்கிறது.
    • விளையாட்டு வீரர்கள் அதிமுக மாநில பொருளாளர் ரவி பாண்டுரங்கனிடம் கோரிக்கை வைத்தனர்.

    புதுச்சேரி:

    அரியாங்குப்பம் தொகுதிக்குட்பட்ட ஆர்.கே.நகர் பகுதியில் பாரதியார் கைப்பந்து போட்டி நடக்கிறது.

    இரவில் போட்டிகள் நடப்பதால் மின்விளக்குகள் அமைத்து தரும்படி கைப்பந்து கழக செயலாளர் சாந்தகுமார், உறுப்பினர்கள், விளையாட்டு வீரர்கள் அதிமுக மாநில பொருளாளர் ரவி பாண்டுரங்கனிடம் கோரிக்கை வைத்தனர். இதையேற்று தன் சொந்த செலவில் ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள மின் விளக்குகளை அ.தி.மு.க. பொருளாளர் ரவி பாண்டுரங்கன் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் தொகுதி செயலாளர் ராஜா, துணை அவைத்தலைவர் ராஜாராம், மாநில எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பாண்டுரங்கன், தொகுதி அவைத்தலைவர் ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர் பாலன், வார்டு செயலாளர் ஜெயக்குமார், சிவரவி, ரங்கநாதன், வார்டு அவைத்தலைவர் கார்த்தி, ஆறுமுகம், மூர்த்தி, தொகுதி செயலாளர் ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×