என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்
புதுவையில் அதிகரிக்கும் கொரோனா
- புதுவையில் தற்போது நாளுக்கு நாள் கொரோனா அதிகரித்து வருகிறது.
- கடந்த 24 மணி நேரத்தில் புதுவையில் 12 பேருக்கும், காரைக்காலில் ஒருவருக்கும், ஏனாமில் 4 பேர், மாகியில் 2 பேர் என மொத்தமாக 19 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
புதுச்சேரி:
புதுவையில் தற்போது நாளுக்கு நாள் கொரோனா அதிகரித்து வருகிறது.
புதுவை மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதுவையில் 12 பேருக்கும், காரைக்காலில் ஒருவருக்கும், ஏனாமில் 4 பேர், மாகியில் 2 பேர் என மொத்தமாக 19 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தற்போது 77 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை ஒட்டுமொத்தமாக 1,65,992 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 1,63,953 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மேலும் சிகிச்சை பலனின்றி இதுவரை 1962 நபர்கள் உயிரிழந்துள்ளனர் என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
Next Story






