search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    கிராம நிர்வாக அலுவலக கட்டிடம் கட்டும்பணி
    X

    கிராம நிர்வாக அலுவலக கட்டிடம் கட்டும்பணியை அங்காளன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்த காட்சி.

    கிராம நிர்வாக அலுவலக கட்டிடம் கட்டும்பணி

    • அங்காளன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
    • புதிய கட்டிடம் கட்டுவதற்காக புதுச்சேரி அரசு பொதுப் பணித்துறை யின் மூலமாக ரூ.20 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது.

    புதுச்சேரி:

    திருபுவனை தொகுதிக் குட்பட்ட சோரப்பட்டு கிராம மக்களின் நீண்ட நாட்கள் கோரிக்கையாக இருந்த கிராம நிர்வாக அலுவல கத்தின் புதிய கட்டிடம் கட்டுவதற்காக புதுச்சேரி அரசு பொதுப் பணித்துறை யின் மூலமாக ரூ.20 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. புதிய கிராம நிர்வாக அலுவலக கட்டிடம் கட்டுவதற்கான நிகழ்ச்சியில் தொகுதியின் எம்.எல்.ஏ. அங்காளன் பங்கேற்று பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் வில்லியனூர் (தெற்கு) கலெக்டர் மகாதேவன், வில்லியனூர் துணை தாசில்தார் சேகர், பொதுப் பணித்துறை சிறப்பு கட்டிட கோட்ட செயற்பொறியாளர் திருஞானம், உதவி பொறியாளர் பாவாடை, இளநிலை பொறியாளர் சண்முகம், கிராம நிர்வாக அதிகாரி தனலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மேலும் இந்நிகழ்ச்சியில் ஒப்பந்ததாரர் பன்னீர்செல்வம் மற்றும் எம்.எல்.ஏ.வின் ஆதர வாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×