search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    பழங்குடியினருக்கு வீடுகள் கட்டும் பணி
    X

    திருச்சிற்றம்பலம் ஊராட்சிக்குட்பட்ட பகத்சிங் நகரில் பழங்குடியினர் மக்களுக்கு வீடு கட்டுவதற்கான பூமி பூஜையை ஒன்றிய சேர்மன் உஷா பி.கே.டி முரளி தொடங்கி வைத்தார். 

    பழங்குடியினருக்கு வீடுகள் கட்டும் பணி

    • திருச்சிற்றம்பலம் ஊராட்சிக்குட்பட்ட பகத்சிங் நகரில் வசிக்கும் பழங்குடியின மக்கள் பல ஆண்டுகளாக குடிசை வீடுகளில் வசித்து வருகின்றனர்.
    • கல்வீடு கட்டி தர கோரி ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசனிடம் மனு அளித்தனர்.

    புதுச்சேரி:

    திருச்சிற்றம்பலம் ஊராட்சிக்குட்பட்ட பகத்சிங் நகரில் வசிக்கும் பழங்குடியின மக்கள் பல ஆண்டுகளாக குடிசை வீடுகளில் வசித்து வருகின்றனர். இதனால் மழை உள்ளிட்ட பேரிடர் காலங்களில் பழங்குடியினர் பல இன்னலுக்கு ஆளாகி வந்தனர். இந்நிலையில் கல்வீடு கட்டி தர கோரி ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசனிடம் மனு அளித்தனர்.

    எனவே வட்டார வளர்ச்சி அதிகாரிகள் முயற்சியில் பழங்குடியினர் நலத் துறையில் தலா ரூ.3 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு 22 வீடுகள் கட்டுவதற்கான ஆணை வழங்கப்பட்டது. இன்று பகத்சிங் நகரில் வீடு கட்டுவதற்கான பூமி பூஜை நடந்தது.

    இதில் வானூர் ஒன்றிய சேர்மன் உஷா பி.கே.டி முரளி, ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன், கவுன்சிலர் புவனேஸ்வரி ராமதாஸ், ஒன்றிய தி.மு.க. செயலாளர் பி.கே.டி முரளி வட்டார வளர்ச்சி அதிகாரிகள் மணிவாசகம், முருகன் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் குமார் ஆகியோர் பூமி பூஜை செய்து வைத்து கட்டுமான பணியை தொடங்கி வைத்தனர்.

    இதில் பழங்குடியின மக்கள் மற்றும் தன்னார்வலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×