search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    20 அடி உயர சுவரில் ஏறி குதித்து பொருட்கள் கொள்ளை
    X

    கோப்பு படம்.

    20 அடி உயர சுவரில் ஏறி குதித்து பொருட்கள் கொள்ளை

    • பெருமாள் என்ற காவலாளி பணியமர்த்தப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்.
    • பூட்டை உடைக்க முடியாத நிலையில் அங்கு இருந்த ஏ.சி. எந்திரத்தின் காப்பர் ஒயரை வெட்டி திருடிச் சென்றுள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுவை அடுத்த தமிழக பகுதி யான ஆரோவில் அருகே உள்ள மொரட்டாண்டி பகுதியில் வசதி படைத்தவர்கள் ஆங்காங்கே காலி மனை பிளாட்டுகளை வாங்கி பல அடி உயரம் சுவர்களை எழுப்பி உள்ளே மரம் செடிகளை வளர்த்து பார்ம் லேண்டை உருவாக்கி வைத்துள்ளனர்.

    பெரும்பாலும் சென்னை உள்ளிட்ட பகுதியை சேர்ந்த வர்களே அதிகம் இடங்களை வாங்கி காம்ப வுண்டு சுவரை எழுப்பி பாதுகாத்து வருகின்றனர். ஒரு சில பார்ம் லேண்டில் சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்பட்டி ருக்கிறது. ஒரு சில இடங்களில் இல்லை.

    இந்நிலையில் சுமார் 20 அடி உயர முள்ள காம்ப வுண்ட் சுவர் அமைக்கப்பட்டுள்ளது. இதில் இரவு நேரங்களில் பெருமாள் என்ற காவலாளி பணியமர்த்தப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்.

    நேற்று இரவு பார்ம் லேண்டின் பின்புறம் காம்பவுண்ட் சுவரில் ஏரி குதித்த மர்ம நபர்கள் உள்ளே அறையில் இருந்த புதிதாக வாங்கப் பட்ட பிரம்மாண்ட எல்.இ.டி. டி.வி., ஏ.சி. இணைப்பில் இருந்த காப்பர் வயர்கள் மற்றும் அறையில் இருந்த விலை உயர்ந்த பொருட்களை சாக்கில் கட்டி திருடி சென்றுள்ளனர்.

    இதேபோல் வடமாநிலத்தை சேர்ந்த தொழிலதிபர் கார்த்தி கேயனின் பார்ம் லேண்ட் பிளாட்டில் கட்டப்பட்டுள்ள வீட்டின் பூட்டை அந்த கும்பல் உடைத்துள்ளது. பூட்டை உடைக்க முடியாத நிலையில் அங்கு இருந்த ஏ.சி. எந்திரத்தின் காப்பர் ஒயரை வெட்டி திருடிச் சென்றுள்ளனர்.

    அடுத்தடுத்த பிளாட்டுக்களில் இருந்த பொருட்கள் ஒரே இரவில் திருட்டு போன சம்பவத்தால் அந்தப் பகுதியில் இடம் வாங்கிய தொழில் அதிபர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

    இதுகுறித்து சம்பந்தப்பட்டவர்கள் ஆரோவில் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×