என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    கிறிஸ்தவ கல்லறை புனரமைப்பு றிஸ்தவ கல்லறை புனரமைப்பு
    X

    கென்னடி எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை வைத்த காட்சி.


    கிறிஸ்தவ கல்லறை புனரமைப்பு றிஸ்தவ கல்லறை புனரமைப்பு

    • சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து கல்லறை புனரமைக்கப்படும் என உறுதி அளித்தார்.
    • ஆய்வின்போது தொகுதி நிர்வாகிகள் சக்திவேல், ராஜி, நோயல், செழியன், இருதயராஜ், ராகேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி உப்பளம் தொகுதிக்குட்பட்ட நேதாஜி நகர் பகுதியில் உள்ள கிறிஸ்தவ கல்லறை பல ஆண்டுகளாக சரியாக பராமரிக்கப்படாமல் புதர் மண்டிகிடந்தது.

    இதனை புனரமைக்க கோரி அப்பகுதி மக்கள் கென்னடி எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து கென்னடி எம்.எல்.ஏ. நேதாஜி நகர் கல்லறைக்கு சென்று ஆய்வு செய்து, சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து கல்லறை புனரமைக்கப்படும் என உறுதி அளித்தார்.

    இது சம்பந்தமாக செயற் பொறியாளர் சிவபாலன், வருவாய் துறை அதிகாரி பிரபாகரனுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. தொடர்ந்து எம்.எல்.ஏ.வின் கோரிக்கையை ஏற்று தற்போது கிறிஸ்தவ கல்லறை சுவரில் வண்ணம் பூசப்பட்டுள்ளது.

    அங்கு புதிதாக 27 மின்விளக்குகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் கல்லறை திருநாள் நிகழ்ச்சியை முன்னிட்டு அங்கு நடைபெற்று வரும் பணிகளை எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார். ஆய்வின்போது தொகுதி நிர்வாகிகள் சக்திவேல், ராஜி, நோயல், செழியன், இருதயராஜ், ராகேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.




    Next Story
    ×