search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    காரைக்காலில் காலரா பாதிப்பு -  முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆய்வு
    X

    காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை முதல்-அமைச்சர் ரங்கசாமி சந்தித்து ஆறுதல் கூறிய காட்சி. அருகில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர் சந்திரபிரியங்கா, பி.ஆர்.சிவா எம்.எல்.ஏ. உள்ளனர்.

    காரைக்காலில் காலரா பாதிப்பு - முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆய்வு

    • புதுவை மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் குடிநீர் குழாயில் கழிவுநீர் கலந்தது.
    • இதனால் நூற்றுக்கணக் கானோர் வாந்தி, பேதியால் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து காரைக்கால் மாவட்டத்தில் பொது சுகாதார அவசர நிலை பிறப்பிக்கப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவை மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் குடிநீர் குழாயில் கழிவுநீர் கலந்தது.

    இதனால் நூற்றுக்கணக் கானோர் வாந்தி, பேதியால் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து காரைக்கால் மாவட்டத்தில் பொது சுகாதார அவசர நிலை பிறப்பிக்கப்பட்டது. பொதுமக்கள் அனைவரும் குடிநீரை காய்ச்சி குடிக்க அறிவுறுத்தப்பட்டனர்.

    அரசு மருத்துவமனை, சமுதாய நல வழி மையம், ஆரம்ப சுகாதார நிலையங்களில் வாந்தி, பேதியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மாவட்ட நிர்வாகம் 144 தடை உத்தரவும் பிறப்பித்து நிலையை கட்டுக்குள் கொண்டு வந்தது.

    இந்த நிலையில் முதல்-அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம் ஆகியோர் அரசு முறை பயணமாக இன்று காரைக்கால் சென்றனர். அவர்களை அமைச்சர் சந்திரபிரியங்கா வரவேற்றார். போலீஸ் சூப்பிரண்டு லோகேஷ்வரன், துணை கலெக்டர் ஆதர்ஷ் அகர்வால் மற்றும் அதிகாரிகள் அவர்களை வரவேற்று அழைத்துச் செனறனர்.

    திருநள்ளாறு சாலையில் வேலப்பர் அருகே உள்ள குடிநீர் தொட்டியை முதல்-அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். முதல்- அமைச்சர் ரங்கசாமி குடிநீரில் குளோரினை அதிகமாக பயன்படுத்தி பொதுமக்களுக்கு வினியோகம் செய்ய உத்தரவிட்டார்.

    தொடர்ந்து பல்வேறு இடங்களுக்கு சென்று முதல்- அமைச்சர், சபாநாயகர், அமைச்சர், அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். இந்த நிலையில் மாவட்ட நிர்வாகம் மருத்துவ ஆலோசனைகள் வழங்க கட்டுப்பாட்டு அறையை திறந்துள்ளது.

    காரைக்கால் மாவட்ட மக்கள் 04368 236565 என்ற எண்ணில் தொடர்புகொண்டு மருத்துவ ஆலோ–சனைகளை பெறலாம்.

    குடிநீரில் அசுத்த நீர் கலந்து வந்தால், இணைப்பில் பழுது இருந்தால் உடனடியாக கட்டணமில்லா தொலைபேசி எண் 1070, 1077, 04368 228801, 227704 என்ற எண்களை தொடர்புகொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் முகமது மன்சூர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

    Next Story
    ×