என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்.
கெங்கைவராக நதீஸ்வரர் கோவில் தேரோட்டம்
- வில்லியனூர் திருக்காஞ்சி கெங்கைவராக நதீஸ்வரர் கோவில் மாசிமக பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- மாசிமக தீர்த்தவாரியும், 7-ந் தேதி விடையாற்றி உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது.
புதுச்சேரி:
வில்லியனூர் திருக்காஞ்சி கெங்கைவராக நதீஸ்வரர் கோவில் மாசிமக பிரம்மோற்சவ விழா ஓவ்வொரு ஆண்டும் மிக சிறப்பாக நடைபெறும் அதுபோல் இந்த ஆண்டு மாசி மக பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
நாள்தோறும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடக்கிறது. வருகிற 4-ந் தேதி 7 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 5-ந் தேதி நடக்கிறது.
மாசிமக தீர்த்தவாரியும், 7-ந் தேதி விடையாற்றி உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது. தேரோட்டத்தில் முதல்-அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் தேனீ.ஜெயக்குமார், இந்து சமய அறநிலையத்துறை செயலர் குமார், ஆணையர் சிவசங்கரன் உட்பட பலர் கலந்து கொள்கின்றனர்.
விழா ஏற்பாடுகளை சிறப்பு அதிகாரி சீத்தாராமன், நிர்வாக அதிகாரி சதீஷ், தலைமை அர்ச்சகர் சரவண சிவாச்சாரியார் உட்பட கிராமவாசிகள் செய்து வருகின்றனர்.






