என் மலர்
புதுச்சேரி

பாகூர் மூலநாதர் -வேதாம்பிகை அம்மனுக்கு திருக்கல்யாணம் உற்சவம் நடந்த காட்சி.
பாகூர் மூலநாதர் கோவிலில் நாளை தேரோட்டம்
- மூலநாதருக்கு திருக்கல்யாண உற்சவம் முன்னாள் எம்.எல்.ஏ. தனவேலு தலைமையில் நடைபெற்றது.
- முதல்-அமைச்சர் ரங்கசாமி செந்தில்குமார் எம்.எல்.ஏ. மற்றும் பலர் கலந்து கொள்கின்றனர்.
புதுச்சேரி:
பாகூரில் 1400 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற வேதாம்பிகை சமேத மூலநாதர் சுவாமி கோவில் உள்ளது. இக்கோவில் பிரமோற்சவ விழா கடந்த 23-ந் தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கியது.
அதனைத்தொடர்ந்து தினமும் காலை மாலை அபிஷேகம், சிறப்பு ஆராதனை நடைபெற்று இரவில் வண்ண விளக்குகளால் சாமி வீதி உலாவும் நடந்து வருகிறது.
நேற்று வேதாம்பிகை அம்மன்-மூலநாதருக்கு திருக்கல்யாண உற்சவம் முன்னாள் எம்.எல்.ஏ. தனவேலு தலைமையில் நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர் திருவிழா நாளை (சனிக்கிழமை) காலை 7 மணிக்கு நடக்கிறது. கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜன் தேரை வடம் பிடித்து தொடங்கி வைக்கிறார். முதல்-அமைச்சர் ரங்கசாமி செந்தில்குமார் எம்.எல்.ஏ. மற்றும் பலர் கலந்து கொள்கின்றனர்.
இந்த தேர் திருவிழாவில் அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க தெற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு ரவிக்குமார், தாசில்தார் பிரதிவீராஜ் தலைமையில் இன்ஸ் பெக்டர், சப் இன்ஸ்பெக்டர் உள்பட 100 -க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
மேலும் தீயணைப்பு வீரர்கள், தாலுக்கா, கொம்யூன் பஞ்சாயத்து, மின்துறை, சுகாதார துறை ஊழியர்களும் பணிகளில் ஈடுபடுத்த உள்ளனர்.






