என் மலர்
புதுச்சேரி

ஆலோசனை கூட்டத்தில் கலை பண்பாட்டுத்துறை இயக்குனர் கவிஞர் கலியபெருமாள் வாழ்த்தி பேசிய காட்சி.
கவிஞர் தமிழ் ஒளியின் நூற்றாண்டு விழா ஆலோசனைக் கூட்டம்
- தமிழ் ஒளி சிலையை வைப்பதற்கு அரசு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
- தமிழ் ஒளியின் அறக்கட்டளை தலைவர் சட்ட திருநாவுக்கரசு நன்றி கூறினார்.
புதுச்சேரி:
புதுவை கவிஞர் தமிழ் ஒளியின் நூற்றாண்டு விழா ஆலோசனைக் கூட்டம் அவர் பிறந்த சாமிப்பிள்ளை தோட்டம் கிடங்கள் அம்மன் கோவிலில் நடந்தது.
இக்கூட்டத்தில் கவிஞர் தமிழ் ஒளியின் நூற்றாண்டு விழாவை ஒரு வார காலம் சிறப்பாக அரசு நடத்த கோருவது, தமிழ் ஒளி சிலையை வைப்பதற்கு அரசு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
ஆலோசனை கூட்டத்தில் கலை பண்பாட்டுத்துறை இயக்குனர் கவிஞர் கலியபெருமாள் வாழ்த்தி பேசினர்.
கூட்டத்தில் தேவி திருவளவன், , அரிகிருஷ்ணன், சாமிப்பிள்ளை தோட்டம் தலைவர் பார்த்திபன் குமார், மனோ, காஞ்சி கலைச்செல்வன், தஞ்சை ஜகத்குரு, சுந்தர், அருள், ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் தமிழ் ஒளியின் அறக்கட்டளை தலைவர் சட்ட திருநாவுக்கரசு நன்றி கூறினார்.






