search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    சிமெண்டு சாலை அமைக்கும் பணி-வைத்திலிங்கம் எம்.பி. தொடங்கி வைத்தார்
    X

    புதிய சிமெண்டு சாலை அமைக்கும் பணியை வைத்திலிங்கம் எம்.பி. தொடங்கி வைத்த காட்சி.

    சிமெண்டு சாலை அமைக்கும் பணி-வைத்திலிங்கம் எம்.பி. தொடங்கி வைத்தார்

    • புதிய சிமெண்டு சாலை மற்றும் இருபுற வாய்க்கால் கட்டைகள் மேம்படுத்தும் பணி எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.12 லட்சத்து 27 ஆயிரம் செலவில் நகராட்சி மூலம் நடைபெற உள்ளது.
    • இதற்கான பணியை கந்தப்பா முதலியார் வீதி காந்திவீதி சந்திப்பில் வைத்திலிங்கம் எம்.பி. நேரு எம்.எல்.ஏ. முன்னிலையில் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

    புதுச்சேரி:

    உருளையன்பேட்டை சின்னக்கடை வார்டு கந்தப்பா முதலியார் வீதியில் மகாத்மா காந்தி வீதி முதல் பாரதி வீதி வரை பழுதடைந்த பழைய சிமெண்டு சாலையினை மாற்றி புதிய சிமெண்டு சாலை மற்றும் இருபுற வாய்க்கால் கட்டைகள் மேம்படுத்தும் பணி எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.12 லட்சத்து 27 ஆயிரம் செலவில் நகராட்சி மூலம் நடைபெற உள்ளது.

    இதற்கான பணியை கந்தப்பா முதலியார் வீதி காந்திவீதி சந்திப்பில் வைத்திலிங்கம் எம்.பி. நேரு எம்.எல்.ஏ. முன்னிலையில் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். விழாவில் புதுவை நகராட்சி ஆணையர் சிவகுமார், செயற்பொறியாளர் சிவபாலன், உதவி பொறியாளர் நமச்சிவாயம், மற்றும் நகராட்சி அதிகாரிகள் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×