search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    விஷ சாராய சாவு குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்
    X

    கோப்பு படம்.

    விஷ சாராய சாவு குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்

    • தமிழக வாழ்வுரிமை கட்சி வலியுறுத்தல்
    • புதுவையில் எது நடந்தாலும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க என்.ஆர்-பா.ஜனதா கூட்டணி அரசு தயங்குகிறது.

    புதுச்சேரி:

    தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் புதுவை மாநில அமைப்பாளர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுவையில் இருந்து அனுமதி இல்லாமல் தமிழகப் பகுதிக்கு தினமும் பல்லாயிரம் லிட்டர் சாராயம் கண்டெய்னர் லாரி, மீன் பாடி வண்டி, ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் மூலம் கடத்தப்படுகிறது. சாராய வியாபாரிகளிடம் கலால்துறை முறையான கணக்கு கேட்பதில்லை. கலால்துறை அதிகாரிகள் கண்டும் காணாமல் விடுவதாலே புதுவை சாராயம் பிற மாநில ங்களுக்கு கடத்தப்படுகிறது.

    புதுவையில் இருந்து தமிழக பகுதிக்கு கடத்தப்பட்ட மெத்தனால் மூலமே மரக்காணம் மற்றும் செங்கல்பட்டு பகுதியைச் சேர்ந்த 22 அப்பாவி கூலி தொழிலாளிகள் விஷ சாராயத்திற்கு பலியாகி உள்ளனர். புதுவையில் சாராயக் கடைகள் 24 மணி நேரமும் இயங்குவதால் இரவு நேரங்களில் சாராயம் கடத்தப்படுகிறது. இதேபோல் கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்து போலி ஆவணங்கள் தயாரி க்கப்பட்டு கண்டெய்னர்னர் லாரி மூலமாக மது தயாரிக்கும் மூலப் பொருளான எரி சாராயம் புதுவைக்கு கொண்டுவரப்பட்டு - புதுவையில் இயங்கி வரும் மதுபான தொழிற்சாலை களுக்கு ஒரு சில மாபியா க்கள் விற்பனை செய்து வருகின்றனர்.

    கலால் துறைக்கு தெரிந்தே இந்த மோசடி நடந்து வருகிறது. விஷ சாராயம் இறப்பு சம்பவத்தில் விஷ சாராயம் விற்பனைக்கு உடந்தையாக இருந்தாக காவல்துறை அதிகாரிகள் மீது தமிழக அரசு தயவு தாட்சியமின்றி சஸ்பெண்ட் நடவடிக்கை எடுத்துள்ளது.ஆனால் புதுவையில் எது நடந்தாலும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க என்.ஆர்-பா.ஜனதா கூட்டணி அரசு தயங்குகிறது.

    புதுவையில் பதுக்கி வைக்கப்பட்ட மெத்தனால் தமிழக பகுதிக்கு கடத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டதின் விளைவாகவே 22 பேர் இறந்துள்ளனர்.

    50-க்கும் மேற்பட்டோர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவலம் ஏற்பட்டுள்ளது. இந்த மரணங்களில் புதுச்சேரி அரசுக்கும் தொடர்பு இருப்பதால் இந்த வழக்கை சிபிஐ விசாரித்து தவறு செய்த அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுத்து அவர்களுக்கு தண்டனை பெற்று தர வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×