என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    200 தன்னார்வலர்களுக்கு விருது-  அமைச்சர் சந்திர பிரியங்கா வழங்கினார்
    X

    தன்னார்வலர்களுக்கு அமைச்சர் சந்திர பிரியங்கா விருது வழங்கிய காட்சி.

    200 தன்னார்வலர்களுக்கு விருது- அமைச்சர் சந்திர பிரியங்கா வழங்கினார்

    • முத்துரத்தினம் அரங்கம் மேல்நிலைப்பள்ளியில் 200 தன்னார்வலர்களுக்கு விருது அமைச்சர் சந்திர பிரியங்கா வழங்கினார்.
    • சமூக சேவை செய்யும் தன்னார்வலர்களுக்கு அன்னை தெரேசா விருது வழங்கும் விழா நடந்தது.

    புதுச்சேரி:

    புதுவை கவுண்டன்பாளையம் முத்துரத்தினம் அரங்கம் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உதவும் இதயம் பேரியக்கம் சார்பில் சமூக சேவை செய்யும் தன்னார்வலர்களுக்கு அன்னை தெரேசா விருது வழங்கும் விழா நடந்தது.

    விழாவில் புதுவை போக்குவரத்து துறை அமைச்சர் சந்திர பிரியங்கா கலந்து கொண்டு 200க்கு மேற்பட்ட தன்னார்வலர்களுக்கு விருது வழங்கினர்.

    சிறப்பு விருந்தினர்களாக புதுவை மாநில ஒருங்கிணைந்த கோஜூரியோ கராத்தே சங்க மாநில செயலாளர் கராத்தே சுந்தர்ராஜன், இசைக்கவி செல்வமணி, சமூக சேவகர் பிரகாஷ் , மதன், கவிஞர் தமிழரசி ஆகியோர் கலந்துகொண்டு விருது பெற்றவர்களை வாழ்த்தி பேசினர்.

    கவிஞர் சங்கர் , லூர்து சேவியர், ராஜலட்சுமி சமூக சேவகர் சவுந்தரராஜன், சரவணன் , தமிழ்ச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக சுந்தர நாட்டியாலயா பள்ளி மாணவிகளின் பரதநாட்டிய கலை நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியின் அனைத்து ஏற்பாடுகளையும் உலக கவிஞர்கள் சங்கமம் நிறுவனர் புதுவை குமார் செய்திருந்தார்.

    Next Story
    ×