என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்.
முறைகேட்டில் ஈடுபட புதிய அமைப்பை ஏற்படுத்த முயற்சி
- புதுவை தன்னாட்சி பெற்ற, பதிவு பெற்ற ராஜீவ் காந்தி விளையாட்டு பயிற்சி பள்ளி மற்றும் புதுவை மாநில விளையாட்டு கவுன்சில் உள்ளது.
- விளையாட்டு வீரர்களின் நீண்ட நாள் கோரிக்கை
புதுச்சேரி:
புதுவை மாநில விளையாட்டு வீரர்கள் நலச்சங்க தலைவர் கராத்தே வளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுவை தன்னாட்சி பெற்ற, பதிவு பெற்ற ராஜீவ் காந்தி விளையாட்டு பயிற்சி பள்ளி மற்றும் புதுவை மாநில விளையாட்டு கவுன்சில் உள்ளது. இதனை முழுவதுமாக மூடி ஊழல்வாதிகளை காப்பாற்றுவதற்கு முயற்சி செய்வது வன்மையாக கண்டிக்கத்தக்கது. 1980-ம் ஆண்டு பதிவு பெற்ற இந்த தன்னாட்சி அமைப்புகளை ஏன் சட்ட திட்டங்களுக்கு எதிராக ஏன் கலைக்க வேண்டும்? என்பதை இந்த புதுவை அரசு விளையாட்டு வீரர்களுக்கும், விளையாட்டு சங்கங்களுக்கும் விளக்க வேண்டும்?
இப்பொழுது மீண்டும் விளையாட்டுத்துறையில் ஊழல் செய்வதற்கு என்று ஒரு புதிய அமைப்பை ஏற்படுத்த முயற்சிப்பது வன்மையாக கண்டனத்துக்குரியது.
புதுவை மாநில விளையாட்டு வீரர்களின் நீண்ட நாள் கோரிக்கை என்பது கல்வித்துறையின் கீழ் இயங்கும் விளையாட்டை தனியாக பிரித்து தனியாக விளையாட்டுத்துறை அமைப்பது என்பதாகும்.
ஆனால் மீண்டும் கல்வித்துறைக்கு இயங்குவதற்காக இத்தகைய ஒரு அமைப்பை பதிவு செய்ய முயற்சிப்பது தேவையில்லாத ஒன்று.
இது தொடர்பாக கல்வித்துறை அலுவலகத்தில் ஒரு ரகசிய கூட்டம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.
எனவே புதுவை கவர்னர் மற்றும் முதல்-அமைச்சர் ஆகியோர் நேரடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு தகுந்த அறிவுரையை கல்வித் துறை அதிகாரிகளுக்கு வழங்கிட வேண்டும்.
இதுபோன்ற சட்டவிரோதமான செயல்களில் ஈடுபட்டால் விளையாட்டு வீரர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபடுவார்கள்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.






