என் மலர்
புதுச்சேரி

போட்டியில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு டாக்டர் ரத்தின ஜானார்த்தனன், கராத்தே சுந்தர்ராஜன் ஆகியோர் பரிசு வழங்கி பாராட்டிய காட்சி.
நியூ லிட்டில் கிட்ஸ் பள்ளியில் குழந்தைகள் தின விழா
- முத்துரத்தினம் அரங்கம் மேல்நிலைப் பள்ளி உள்விளையாட்டு அரங்கில் நடந்தது.
- வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசு வழங்கினர்.
புதுச்சேரி:
புதுவை தந்தை பெரி யார் நகரில், நியூ லிட்டில் கிட்ஸ் மழலையர் பள்ளி யின் குழந்தைகள் தின விழா, முத்துரத்தினம் அரங்கம் மேல்நிலைப் பள்ளி உள்விளையாட்டு அரங்கில் நடந்தது.
பள்ளி தாளாளர் டாக்டர் ரத்தின ஜனார்த்தனன் தலைமை தாங்கினர். டாக்டர் ரங்க நாயகி வளவன், ஜிப்மர் இதயவியல் துறை டாக்டர் இளவரசி சங்கர் ஆகியோர் தலைமை விருந்தினர்களாக பங்கேற்று போட்டியில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசு வழங்கினர்.
டாக்டர் ரத்தின வசந்தன், பல் மருத்துவர் நீனா வசந்தன் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. புதுச்சேரி மாநில கோஜூரியோ கராத்தே சங்க மாநில செயலாளர் சுந்தர்ராஜன், பள்ளி முதல்வர் கவிதா சுந்தர்ராஜன், மூத்த அலுவலக அதிகாரி மரிய ஸ்டெல்லா முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக தேச தலைவர்கள் போன்று குழந்தைகள் மாறுவேடமிட்டு கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை நியூ லிட்டில் கிட்ஸ் மழலை யர் பள்ளி ஆசிரியர்கள் லட்சுமி பிரியா, மகாலட் சுமி,சோனியா, சுஜாதா ஆகியோர் செய்திருந்தனர்.






