என் மலர்
புதுச்சேரி

புதியதாக நியமிக்கப்பட்ட கோவில் நிர்வாக அதிகாரிகள் முதல்-அமைச்சர் ரங்கசாமி மற்றும் எதிர்கட்சிதலைவர் சிவா ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்ற காட்சி.
6 கோவில்களுக்கு புதிய நிர்வாக அதிகாரிகள் நியமனம்
- அறிநிலையத்துறை மூலம் கோவில் நிர்வாக அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
- ஒதியம்பட்டு காசி விஸ்வநாத ஆலயத்திற்கு வருவாய் ஆய்வாளர் வெங்கடேசன், ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
புதுச்சேரி:
வில்லியனூர் தொகுதிக் குட்பட்ட கோகிலாம்பிகை உடனுறை திருக்காமீஸ்வரர் தேவஸ்தானம், தென்கலை வரதராஜ பெருமாள் தேவஸ்தானம், முத்தால வாழியம்மன் ஆலயம், புதுவை நகராட்சிக்கு உட்பட்ட பாப்பாஞ்சாவடி முத்து மாரியம்மன் ஆலயம், ஒதியம்பட்டு முத்தமாரியம்மன் ஆலயம், காசி விஸ்வநாதர் ஆலயம் ஆகிய 6 கோவில்களுக்கு எதிர்க்க ட்சித் தலைவர் சிவா பரிந்துரைச் செய்த அரசு அதிகாரிகள் முதல்- அமைச்சர் ரங்கசாமி உத்தர வின்படி, புதுவை அரசின் இந்து அறிநிலையத்துறை மூலம் கோவில் நிர்வாக அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
திருக்காமீஸ்வரர் கோவிலுக்கு பட்டாதாரி ஆசிரியர் திருக்காமீஸ்வரன், தென்கலை வரதராஜ பெருமாள் தேவஸ்தா னத்திற்கு கால்நடை டாக்டர் சந்தானராமன், முத்தால வாழியம்மன் ஆலயத்திற்கு பட்டாதாரி ஆசிரியர் சரவணன், பாப்பாஞ்சாவடி முத்து மாரியம்மன் ஆலயத்திற்கு தலைமை எழுத்தர் இளங்கோவன் என்ற சத்தீஷ், ஒதியம்பட்டு முத்து மாரியம்மன் ஆலயத்திற்கு பற்குணன், ஒதியம்பட்டு காசி விஸ்வநாத ஆலயத்திற்கு வருவாய் ஆய்வாளர் வெங்கடேசன், ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
புதியதாக நியமிக்கப்பட்ட 6 கோவில்களின் நிர்வாக அதிகாரிகள் முதல் அமைச்சர் ரங்கசாமி, எதிர்க்கட்சித் தலைவர் சிவா ஆகியோர் முன்னி லையில் பதவியேற்று தங்கள் பணிகளை தொடங்கினார்கள். இந்த நிகழ்ச்சியில், ஊர் முக்கியஸ்தர்கள், பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.






