search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    கல்வி உதவித்தொகை பெற திடீர் உத்தரவால்  ஆதிதிராவிட மாணவர்கள் தவிப்பு
    X

    பாகூர் அடுத்த கிருமாம்பாக்கம் பகுதியில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்தில் சாதி சான்றிதழ் பெற கூட்டம் இருப்பதை படத்தில் காணலாம்.

    கல்வி உதவித்தொகை பெற திடீர் உத்தரவால் ஆதிதிராவிட மாணவர்கள் தவிப்பு

    • மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களிடம் இருந்து முறையாக சான்றிதழ் பெறப்பட்டு அந்த துறைக்கு பள்ளியின் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
    • பொது சேவை மையங்கள் மற்றும் ஆன்லைன் சென்டர்களில் மக்கள் குவிந்து வருவதால் பல சென்டர்களில் சர்வர்கள் சரியாக வேலை செய்யவில்லை என்று தெரிகிறது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி அரசு பள்ளியில் படித்து வரும் ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி நலத்துறை மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாணவர்களிடம் இருந்தும் தகுதியான சான்றிதழ் பெறப்பட்டு பள்ளியின் மூலமாக ஆதிராவிடர் நலத்துறைக்கு அனுப்பி வைக்கப்படும். அதன்பிறகு நலத்துறை விசாரித்து அவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வந்தது.

    இந்நிலையில் 2023- 24 ஆண்டிற்கான கல்வி உதவித்தொகை குறித்து நலத்துறை மூலமாக இதுவரை எந்த அறிவிப்பும் வரவில்லை. அதே வேளை யில் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களிடம் இருந்து முறையாக சான்றிதழ் பெறப்பட்டு அந்த துறைக்கு பள்ளியின் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    இதனை அடுத்து நேற்று பல்வேறு பள்ளிகளில் ஆதிதிராவிடர் மாணவர்கள் அழைத்து கல்வி உதவித்தொகை பெற நாளை 30-ந்தேதிக்குள் ஆன்லைனில் உடனடியாக விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் பள்ளிகளில் 2 நாட்களுக்குள் எப்படி விண்ணப்பிக்க முடியும் என்று புலம்புகின்றனர்.

    சான்றிதழ்கள் பெறுவதற்காக வருவாய் அலுவலகங்களில் பெற்றோர்கள் குவிந்து வருகின்றனர். பொது சேவை மையங்கள் மற்றும் ஆன்லைன் சென்டர்களில் மக்கள் குவிந்து வருவதால் பல சென்டர்களில் சர்வர்கள் சரியாக வேலை செய்யவில்லை என்று தெரிகிறது.

    இதனால் பெற்றோர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பி போய் உள்ளனர்.

    இதுகுறித்து மாணவர்களின் பெற்றோர்கள் கூறும்போது:- முன்பெல்லாம் தொடர்ந்து படிக்கும் மாணவர்கள் கல்வி ஊக்கத்தொகை பெற விண்ணப்பத்தை பள்ளியிலேயே புதுப்பித்து கொள்வோம். இப்போது மாணவர்கள் அனைவருமே ஆன்லைனில் சென்று விண்ணப்பிக்க வேண்டும் என்று கூறுகின்றனர். அதுவும் 3 நாட்களில் சான்றிதழ்கள் பெற்று எப்படி விண்ணப்பிப்பது? அதிதிராவிடர் நலத்துறை தொடர்ந்து எங்களை அலை கழித்து வருகிறது. உடனடியாக இது குறித்து சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் தலையிட்டு இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். பழைய முறையை பின்பற்ற வேண்டும். அல்லது இறுதி தேதியை தள்ளி வைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.

    Next Story
    ×