என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்.
திருக்காமீஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர தேரோட்டம்
- அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அர்ச்சனை, இரவு அம்மன் வீதியுலா நடக்கிறது.
- விழா ஏற்பாடுகளை கோவில் சிறப்பு அலுவலர் திருவரசன் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.
புதுச்சேரி:
புதுவை வில்லியனூர் கோகிலாம்பிகை உடனுறை திருக்காமீஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர விழா கடந்த 12-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
12 நாட்கள் நடைபெறும் விழாவில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அர்ச்சனை, இரவு அம்மன் வீதியுலா நடக்கிறது. முக்கிய விழாவான தேரோட்டம் நாளை 20-ந் தேதி காலை 8.15 மணிக்கு நடக்கிறது. முதல்-அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், தேனீ.ஜெயக்குமார், லட்சுமிநாராயணன், சாய்.ஜெ.சரவணன்குமார், எதிர்கட்சித்தலைவர் சிவா ஆகியோர் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைக்கின்றனர்.
22-ந் தேதி இரவு தெப்பல் உற்சவம், 23-ந் தேதி விடையாற்றி உற்சவம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் சிறப்பு அலுவலர் திருவரசன் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.
Next Story






