search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    பட்டாசு குடோனில் திடீர் ஆய்வு
    X

    பாகூர் அடுத்த மாஞ்சலையில் உள்ள பட்டாசு குடோனில் இன்ஸ்பெக்டர் கணேஷ் மற்றும் போலீசார் ஆய்வு செய்த காட்சி. 

    பட்டாசு குடோனில் திடீர் ஆய்வு

    • பட்டாசு தொழிற்சாலை, பட்டாசு குடோன் மற்றும் கடைகளில் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
    • தீ விபத்தை தடுக்கும் பாதுகாப்பு உபகர ணங்களை வைத்திருக்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தினர்.

    புதுச்சேரி:

    தமிழகத்தில் அடுத்தடுத்து பட்டாசு தொழிற்சாலை களில் விபத்து ஏற்பட்டு பலர் உயிர் இழந்தனர்.

    இதையடுத்து புதுவை முழுவதும் பட்டாசு தொழிற்சாலை, பட்டாசு குடோன் மற்றும் கடைகளில் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இதன்படி பாகூர் மாஞ்சாலை சாலையில் உள்ள பட்டாசு குடோனில் பாகூர் இன்ஸ்பெக்டர் கணேஷ், சப் இன்ஸ்பெக்டர் தமிழ ரசன் மற்றும் போலீசார் ஆகியோர் திடீர் ஆய்வு செய்தனர்.

    இந்த ஆய்வில் பட்டாசு கடைகளின் உரிமம், வெடிமருந்து இருப்பு, விற்பனை செய்த ரசீது ஊழியர்கள் விபரம் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தனர்.

    அப்போது, பட்டாசு கடை நடத்துபவர்கள் புதுவை அரசு அறிவித்துள்ள பாதுகாப்புவழி முறைகளை கடைபிடிக்க வேண்டும் என்றும். தீ விபத்தை தடுக்கும் பாதுகாப்பு உபகர ணங்களை வைத்திருக்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தினர்.

    Next Story
    ×