search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    விசேஷம்... இது... வித்தியாசம்... 5 ரூபாய் புரோட்டா கடை
    X

    விசேஷம்... இது... வித்தியாசம்... 5 ரூபாய் புரோட்டா கடை

    • 10 பைசாவிற்கு விற்ற ஒரு புரோட்டா 25 பைசா, 50 பைசா, 1 ரூபாய் என உயர்ந்து 5 ரூபாயை எட்டியுள்ளது.
    • சிறுவயது முதல் கடையிலேயே வேலை செய்த மைதீனின் மகன் ஷரீப் தந்தை மறைவிற்கு பின் தற்போது கடையை நடத்தி வருகிறார்.

    புதுவை கிழக்கு கடற்கரை சாலையில் தமிழக எல்லையான கோட்டக்குப்பம் இஸ்லாமியர் அதிகம் வசிக்கும் பகுதியாகும்.

    இங்கு பிரியாணி, புரோட்டா, சிக்கன் சமோசா, ஆட்டுகால் சூப் என மசாலா மணம் கமழும். இங்கு 5 ரூபாய் புரோட்டா கடையும் உள்ளது. 80 ஆண்டுகளுக்கு முன்பு இருந்து இயங்கும் ஒரே புரோட்டா கடை இது தான்.

    கவி பக்கிரி மைதீன் என்பவர் நடத்திய இந்த கடைக்கு கவி ஓட்டல் என பெயர் இருந்தாலும் 5 ரூபாய் புரோட்டா கடை என்பதுதான் அடையாளம்.

    10 பைசாவிற்கு விற்ற ஒரு புரோட்டா 25 பைசா, 50 பைசா, 1 ரூபாய் என உயர்ந்து 5 ரூபாயை எட்டியுள்ளது. சிறுவயது முதல் கடையிலேயே வேலை செய்த மைதீனின் மகன் ஷரீப் தந்தை மறைவிற்கு பின் தற்போது கடையை நடத்தி வருகிறார்.

    ஏ.சி. கிடையாது, வசதியான சேர்-டேபிள் கிடையாது. அந்த காலத்து பெஞ்சு, சேர், சாதாரண மர மேஜை மட்டுமே. காலை 7 மணி முதல் இரவு 11 மணி வரை புரோட்டா கிடைக்கும்.

    இதனால் புரோட்டாவை ஒருபுறம் போட்டு கொண்டே இருக்கிறார்கள். மறுபக்கம் சால்னா கொதித்து கொண்டே இருக்கிறது. விறகு அடுப்பில்தான் சமையல். மசாலா பொருட்கள் அனைத்தையும் சொந்தமாக தயாரிக்கிறார்கள்.

    கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் ஒரு ரூபாய் புரோட்டா 5 ரூபாயானது. அதன் பிறகு விலை ஏற்றவில்லை. தரமும் குறைக்கப்படவில்லை. நாளுக்கு 2 ஆயிரம் புரோட்டா வரை போடுகிறார்கள். கடையில் 10 பேர் பணிபுரிகிறார்கள்.

    பல ஆண்டுகளாக ஒரே சுவையை அளிக்கின்றனர். இயற்கை முறையிலான உணவு தயாரிப்பதை சாப்பிடும் மக்கள் இங்கு நேரடியாகவே பார்ப்பது கூடுதல் சிறப்பு.

    செயற்கை சுவையூட்டி மற்றும் நிறமூட்டி கிடையாது என்பதால் புதுவைக்கு பல பகுதிகளில் இருந்து வருபவர்கள் இங்கு சாப்பிட்டு செல்கின்றனர்.

    Next Story
    ×