என் மலர்
புதுச்சேரி

புதிய வகுப்பறையை அங்காளன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
அரசு ஆரம்பப் பள்ளியில் புதியதாக 3-ம் வகுப்பு தொடக்கம்
- சிலுக்காரிப்பாளையம் அரசு ஆரம்பப் பள்ளியில் புதியதாக 3-ம் வகுப்பு தொடங்கப்பட்டுள்ளது.
- திருபுவனை தொகுதி எம்.எல்.ஏ. அங்காளன் பங்கேற்று புதியதாக அமைக்கப்பட்டுள்ள வகுப்பறையினை திறந்து வைத்தார்
புதுச்சேரி:
திருபுவனை தொகுதிக்குட்பட்ட சிலுக்காரிப்பாளையம் அரசு ஆரம்பப் பள்ளியில் புதியதாக 3-ம் வகுப்பு தொடங்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் திருபுவனை தொகுதி எம்.எல்.ஏ. அங்காளன் பங்கேற்று புதியதாக அமைக்கப்பட்டுள்ள வகுப்பறையினை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் புதுவை அரசு பள்ளி கல்வித்துறையின் துணை ஆய்வாளர் ராபர்ட் கென்னடி மற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியர் அறிவழகன் மற்றும் ஆசிரியர்கள், ஆசிரியை மாணவ-மாணவிகள் மற்றும் எம்.எல்.ஏ. ஆதரவாளர்கள் பங்கேற்றனர்.
Next Story






