என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    கவுசிக பாலசுப்பிரமணியர் கோவிலில் 108 பால்குடம்
    X

    கவுசிக பாலசுப்பிரமணியர் கோவிலில் வைகாசி விசாகத் திருவிழாவையொட்டி பால்குட ஊர்வலம் நடந்த காட்சி.

    கவுசிக பாலசுப்பிரமணியர் கோவிலில் 108 பால்குடம்

    • புதுவை ரெயில் நிலையம் அருகில் உள்ள கவுசிக பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாக விழா விநாயகர் பூஜையுடன் தொடங்கியது.
    • தொடர்ந்து சண்முகாஅர்ச்சனையும், சுவாமி உள்புறப்பாடும் நடைபெற்றது.

    புதுச்சேரி:

    புதுவை ரெயில் நிலையம் அருகில் உள்ள கவுசிக பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாக விழா விநாயகர் பூஜையுடன் தொடங்கியது. லட்சார்ச்சனை நடைபெற்றது. தொடர்ந்து சண்முகாஅர்ச்சனையும், சுவாமி உள்புறப்பாடும் நடைபெற்றது.

    முக்கிய நிகழ்ச்சியான வைகாசி விசாக பெருவிழா நடைபெற்றது. இதனையொட்டி பக்தர்கள் 108 பால்குடங்களை சுமந்து ஊர்வலமாக சென்றனர். அந்த பால் சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சுவாமிக்கு மகாஅபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை பரிபாலகர் காதர், ஆலய அர்ச்சகர்கள் ஞானசேகர், ராஜேஷ்குமார் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.

    Next Story
    ×