search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    5-வது மாதத்தை நெருங்கும் போர்: கிழக்கு உக்ரைன் நகரை ரஷிய படை கைப்பற்றியது
    X

    5-வது மாதத்தை நெருங்கும் போர்: கிழக்கு உக்ரைன் நகரை ரஷிய படை கைப்பற்றியது

    • உக்ரைனின் வடகிழக்கு நகரமான கார்கிவ்வில் உள்ள அணு ஆராய்ச்சி நிலையம் மீது ரஷியா குண்டு வீசி தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
    • அண்டை நாடான பெலாரசில் இருந்து உக்ரைன் மீது பெரிய அளவில் குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டதாக உக்ரைன் தெரிவித்து உள்ளது.

    கிவ்:

    உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் 24-ந்தேதி போர் தொடங்கியது. ரஷிய படைகளின் தாக்குதல் 5-வது மாதத்தை நெருங்கி உள்ளது.

    தொடக்கத்தில் உக்ரைனின் அனைத்து நகரங்கள் மீதும் கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டது. தற்போது கிழக்கு உக்ரைனை கைப்பற்ற ரஷியா முயற்சித்து வருகிறது. குறிப்பாக டான்பாஸ் பிராந்தியத்தை முற்றிலும் கட்டுபாட்டுக்குள் கொண்டு வர தீவிரம் காட்டி வருகின்றன.

    அங்குள்ள செவரோடோனெட்ஸ்க் நகரை கைப்பற்ற ரஷிய படைகள் சில வாரங்களாக கடும் தாக்குதல் நடத்தி வந்தன. கட்டிடங்கள் மீது ஏவுகணைகள் வீசப்பட்டன.

    இந்த நிலையில் அந்நகரை ரஷிய ராணுவம் முழுமையாக தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. இதனை அந்நகர மேயர் ஒலெக்சாண்டர் ஸ்ட்ரிக் உறுதிப்படுத்தினார்.

    அவர் கூறும்போது, ரஷியர்களால் செவரோடோனெட்ஸ்க் நகரம் முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என்றார். கிழக்கு உக்ரைனின் முக்கிய நகரம், ரஷிய படைகள் வசம் சென்றுள்ளது என்பது குறிப்பித்தக்கது.

    மேலும் கிழக்கு உக்ரைனில் உள்ள லிசிசான்ஸ்க் நகரை நாட்டின் தெற்கு பகுதியில் துண்டிக்க ரஷிய படைகள் முயற்சித்து வருகின்றன.

    இதற்கிடையே உக்ரைனின் வடகிழக்கு நகரமான கார்கிவ்வில் உள்ள அணு ஆராய்ச்சி நிலையம் மீது ரஷியா குண்டு வீசி தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

    இந்த நிலையில் அண்டை நாடான பெலாரசில் இருந்து உக்ரைன் மீது பெரிய அளவில் குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டதாக உக்ரைன் தெரிவித்து உள்ளது.

    வடக்கு செர்னிகிவ் பிராந்தியத்தில் உள்ள டெஸ்னா கிராமத்தை குறி வத்து 20 ராக்கெட்டுகள் வீசப்பட்டன என்றும் இதில் ராணுவ நிலையின் உள்கட்டமைப்பு சேதமடைந்தது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    பெலாரஸ், ரஷியாவின் நட்பு நாடாக இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. உக்ரைன் மீது ரஷியாவின் போரில் பெலாரஸ் அதிகாரப்பூர்வமாக ஈடுபட்டாத நிலையில் அந்நாட்டில் இருந்து தாக்குதல் நடத்தபபட்டதாக உக்ரைன் புகார் தெரிவித்துள்ளது.

    Next Story
    ×