search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    அமெரிக்காவில் பல்கலைக்கழகத்தில் துப்பாக்கி சூடு-பேராசிரியர் பலி
    X

    அமெரிக்காவில் பல்கலைக்கழகத்தில் துப்பாக்கி சூடு-பேராசிரியர் பலி

    • பேராசிரியர் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
    • கொலை நடந்த 3 மணி நேரத்தில் மர்ம நபரை போலீசார் கண்டுபிடித்து கைது செய்தனர்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் சமீப காலமாக துப்பாக்கி சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

    பள்ளி, கல்லூரிகள், பொது இடங்களில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடப்பதால் அப்பாவி மாணவர்கள், பொதுமக்கள் உயிரிழக்கும் பரிதாப நிலை ஏற்படுகிறது.

    இதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் துப்பாக்கி சூடு சம்பவங்கள் குறைந்த பாடில்லை.

    இந்த நிலையில் அமெரிக்காவின் வடக்கு கரோலினா பல்கலைக்கழகத்தில் உள்ள அறிவியல் கட்டிடத்தில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியுடன் நுழைந்தான். அவன் அங்கிருந்த பேராசிரியரை துப்பாக்கியால் சுட்டான்.

    இதில் பேராசிரியர் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். பின்னர் மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டான்.

    இதையடுத்து துப்பாக்கி சூடு குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். உயிரிழந்த பேராசிரியரின் உடலை கைப்பற்றி மருத்துவ மனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    மர்ம நபர் குறித்து விசாரணை நடத்திய போலீசார் சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை ஆய்வு செய்து அவனை தீவிரமாக தேடினர். கொலை நடந்த 3 மணி நேரத்தில் மர்ம நபரை போலீசார் கண்டுபிடித்து கைது செய்தனர். அவன் மீது வழக்குப்பதிவு செய்து துப்பாக்கி சூடு நடத்தியதற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×