search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    அமெரிக்காவில் விலைவாசி உயர்வு-  நம்மூர் கறிவேப்பிலை என்ன விலை தெரியுமா?
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    அமெரிக்காவில் விலைவாசி உயர்வு- நம்மூர் கறிவேப்பிலை என்ன விலை தெரியுமா?

    • கறிவேப்பிலைக்கு வெளிநாடுகளில் கடும் கிராக்கி உள்ளது.
    • மும்பையை சேர்ந்தவர் குல்சன் சைனி. இவர் தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார்.

    வாஷிங்டன்:

    நம்மூர் காய்கறி கடைக்கு காய்கறி வாங்க சென்றால் அதற்கு கொசுறு போல வியாபாரிகள் கறிவேப்பிலை கொடுப்பார்கள். ஆனால் சில்லறை விற்பனை கடைகளில் இதற்கு 2 ரூபாய், 3 ரூபாய் காசு வாங்குவதும் உண்டு.

    இந்த கறிவேப்பிலைக்கு வெளிநாடுகளில் கடும் கிராக்கி உள்ளது. அமெரிக்காவில் ஒரு கட்டு கறிவேப்பிலை 80 ரூபாய்க்கு விற்கப்படுகிறது என்றால் நம்பி தான் ஆக வேண்டும்.

    மும்பையை சேர்ந்தவர் குல்சன் சைனி. இவர் தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார்.

    இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டு உள்ளார். அதில் அவர் நம்ம ஊரில் கிடைக்கும் மளிகை பொருட்களின் விலை அமெரிக்காவில் என்ன விலைக்கு விற்கப்படுகிறது என்பது தொடர்பாக விளக்கி உள்ளார்.

    அதன்படி பன்னீர் பாக்கெட் ரூ393-க்கும், வீட்டை பெருக்கும் துடைப்பம் ஒன்று ரூ 472, ஒரு கொத்து கறிவேப்பிலை இந்திய ரூபாய் மதிப்பில் 80 ரூபாய்க்கும் விற்கப்படுவதாக தெரிவித்து உள்ளார்.

    மேலும் மொத்தம் இந்திய பணத்தில் ரூ.7 ஆயிரத்துக்கு 10 பொருட்கள் தான் வாங்க முடியும் என்றும் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதால் இந்த பொருட்கள் எல்லாம் தாறுமாறாக விற்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டு உள்ளார்.

    இந்த வீடியோ தற்போது சமூகவலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    இதை பார்த்து பலர் கமாண்ட் செய்து வருகிறார்கள்.

    Next Story
    ×