என் மலர்tooltip icon

    உலகம்

    கொழும்புவில் தொடர்ந்து பதற்றம்- அமலுக்கு வந்தது ஊரடங்கு உத்தரவு
    X

    கொழும்புவில் தொடர்ந்து பதற்றம்- அமலுக்கு வந்தது ஊரடங்கு உத்தரவு

    • மாலத்தீவு தப்பிச் சென்ற கோத்தபய ராஜபக்சே அங்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில், சிங்கப்பூர் புறப்பட்டார்.
    • கொழும்புவில் தொடர்ந்து பதற்றம் நிலவி வரும் நிலையில் மீண்டும் ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.

    இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியை அனுபவித்து வருவதால், மருந்துகள், சமையல் எரிவாயு, எரிபொருள் மற்றும் உணவு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

    இதனால், போராட்டத்தில் குதித்துள்ள மக்கள் அதிபர் மாளிகை, பிரதமர் அலுவலகங்களை முற்றுகையிட்டனர். இதனால், இலங்கையில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

    இலங்கையின் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே தப்பித்துவிட்டதால், பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கே தற்காலிக இடைக்கால அதிபராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். நேற்று மாலத்தீவு தப்பிச் சென்ற கோத்தபய ராஜபக்சே அங்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில், சிங்கப்பூர் புறப்பட்டார்.

    இருப்பினும், இலங்கை தலைநகர் கொழும்புவில் போராட்டம் கட்டுக்குள் வரவில்லை. இதனால், கொழும்புவில் இன்று மதியம் 12 மணி முதல் நாளை காலை 5 மணி வரை ஊரடங்கு உத்தரவை இலங்கை அரசு பிறப்பித்துள்ளது. தலைநகர் கொழும்புவில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருவதால் மீண்டும் ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×