search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    விமானம் ஓட்டிய தாய்-மகள்: சமூக வலைத்தளத்தில் வைரலான வீடியோ
    X

    வெற்றிகரமாக விமானத்தை இயக்கிய உற்சாகத்தில்...

    விமானம் ஓட்டிய தாய்-மகள்: சமூக வலைத்தளத்தில் வைரலான வீடியோ

    • ஹோலி கல்லூரி படிப்பை முடித்த பிறகு விமானப் பணிப்பெண்ணாகத்தான் தனது வாழ்க்கையை தொடங்கி இருக்கிறார்.
    • திருமணமாகி குழந்தைகளை பெற்றெடுத்த பிறகு சிரமங்களுக்கு மத்தியில் விமான பணியை விரும்பி தொடர்ந்திருக்கிறார்.

    ஒரே துறையில் பணியாற்றும் குடும்பத்தினர் எப்போதாவது ஒன்றாக இணைந்து பணிபுரியும் வாய்ப்பு அமைவதுண்டு. அப்படி நடக்கும் நிகழ்வுகள் அபூர்வமான சாதனையாக மாறிவிடுவதுண்டு. அமெரிக்காவில் அப்படியொரு சம்பவம் அரங்கேறி இருக்கிறது. பைலட்டுகளாக பணிபுரியும் தாய்-மகள் இருவரும் இணைந்து விமானம் ஓட்டி அசத்தி இருக்கிறார்கள்.

    அமெரிக்காவின் சவுத் வெஸ்ட் ஏர்லைன்சில் இருவரும் பணிபுரிகிறார்கள். தாயார் ஹோலி பெடிட், கேப்டன் அந்தஸ்தில் இருக்கிறார். மகள் கீலி பெட்டிட் முதல் நிலை அதிகாரியாக பணிபுரிகிறார். இருவரும் அமெரிக்காவின் கொலராடோ மாநிலத்திலுள்ள டென்வரில் இருந்து செயிண்ட் லூயிஸ் நகருக்கு விமானத்தை இயக்கி இருக்கிறார்கள்.

    இரு நகரங்களுக்கு இடையே விமான பயண தூரம் சுமார் 2 மணி நேரம். இதன் மூலம் அமெரிக்காவில் விமானம் இயக்கிய முதல் தாய்-மகள் என்ற பெருமையை பெற்றுள்ளார்கள். இருவரும் விமானம் ஓட்டும் புகைப்படங்களும், வீடியோவும் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வைரலாகி இருக்கிறது. ''எங்களுக்கும், சவுத் வெஸ்ட் ஏர்லைன்ஸுக்கும் இது உற்சாகமான நாள்.

    மிகவும் சிறப்பான நாளும் கூட. சவுத் ஏர்லைன்ஸ் விமானத்தை இயக்கும் முதல் தாய்-மகள் நாங்கள்தான் என்பது பெருமிதமாக இருக்கிறது. என் கனவும் நனவாகி உள்ளது. நான் இந்த தொழிலை காதலிக்கிறேன். என் பிள்ளைகளில் ஒருவர், என்னை பின்பற்றி இந்த தொழிலில் இணைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நாங்கள் இருவரும் இணைந்து விமானம் ஓட்டியது வரலாற்று நிகழ்வாக பதிவாகி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது'' என்கிறார் ஹோலி.

    ஹோலி கல்லூரி படிப்பை முடித்த பிறகு விமானப் பணிப்பெண்ணாகத்தான் தனது வாழ்க்கையை தொடங்கி இருக்கிறார். திருமணமாகி குழந்தைகளை பெற்றெடுத்த பிறகு சிரமங்களுக்கு மத்தியில் விமான பணியை விரும்பி தொடர்ந்திருக்கிறார். விமானியாக வேண்டும் என்ற எண்ணத்தில் அதற்கான பயிற்சி வகுப்புகளிலும் பங்கேற்றிருக்கிறார்.

    பின்பு விமானி உரிமம் பெற்று பைலட்டாக மாறிவிட்டார். தாயாரை பார்த்து கீலிக்கும் விமானம் ஓட்டும் ஆசை பிறந்திருக்கிறது. தனது 14 வயதில் விமானி ஆக வேண்டும் என்று கனவு காண தொடங்கி இருக்கிறார்.

    கடந்த 2017-ம் ஆண்டு பைலட் உரிமம் பெற்று விமான நிறுவனத்தில் பயிற்சியாளராக பணியாற்றத் தொடங்கினார். 2018-ம் ஆண்டு விமானியாக பணியமர்த்தப்பட்டிருக்கிறார். இருப்பினும் இப்போதுதான் தாய்-மகள் இருவரும் ஒன்றாக இணைந்து விமானம் ஓட்டி இருக்கிறார்கள்.

    Next Story
    ×