search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    மெக்சிகோவில் மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு- 10 பேர் பலி
    X

    மெக்சிகோவில் மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு- 10 பேர் பலி

    • மத்திய மெக்சிகோ குவானாஜூவலாடோ என்ற மாகாணத்தில் தரிமோரோ என்ற பகுதி உள்ளது.
    • மர்ம நபர்களின் இந்த தாக்குதலுக்கு குவானா ஜூவலாடோ கவர்னர் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

    தரிமோரா:

    மத்திய மெக்சிகோ குவானாஜூவலாடோ என்ற மாகாணத்தில் தரிமோரோ என்ற பகுதி உள்ளது. சிறந்த தொழில் நகரமாக திகழும் இந்த இடத்தில் உள்ள ஒரு அலுவலகத்தில் புகுந்த மர்ம கும்பல் அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர்.

    இதில் பலர் குண்டுகாயம் அடைந்து கீழே சரிந்தனர். இதைபார்த்த பலர் உயிருக்கு பயந்து அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 9 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

    இது பற்றி அறிந்த போலீசார் அங்கு விரைந்து வந்து படுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவர்களை மீட்டு உடனடியாக ஆஸ்பத்திரிக்கு எடுத்து சென்றனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் ஒருவர் இறந்தார். இதனால் பலி எண்ணிக்ககை 10 ஆக உயர்ந்தது.

    இந்த செயலில் ஈடுபட்ட மர்ம நபர்கள் யார்? என்று தெரியவில்லை. அவர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.

    குவானாஜூவலாடோ மாகாணத்தில் கடந்த 2006-ம் ஆண்டில் இருந்து போதை பொருட்கள் கடத்தல் செயல்கள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மெக்சிகோ அரசு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது. அனாலும் போதை பொருட்கள் மற்றும் சமூக விரோத கும்பலை சேர்ந்தவர்கள் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இதில் இதுவரை 3 லட்சத்து 40 ஆயிரம் பேர் கொல்லப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மர்ம நபர்களின் இந்த தாக்குதலுக்கு குவானா ஜூவலாடோ கவர்னர் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

    Next Story
    ×