என் மலர்

  உலகம்

  9 பெண்களை திருமணம் செய்த வாலிபர்- 4 பேரை விவாகரத்து செய்ய போவதாக அறிவிப்பு
  X

  9 பெண்களை திருமணம் செய்த வாலிபர்- 4 பேரை விவாகரத்து செய்ய போவதாக அறிவிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • 9 பெண்களை திருமணம் செய்த வாலிபரின் பெயர் ஆர்தர் ஓ உர்சோ.
  • வருங்காலத்தில் இன்னும் பல திருமணங்கள் செய்து கொள்ள ஆசைப்படுகிறேன்.

  காதலின் மயக்கத்தால் ஒரே நேரத்தில் 9 பெண்களை திருமணம் செய்த பிரேசிலை சேர்ந்த மாடல் ஒருவர் பற்றிய செய்திகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இணையத்தில் வைரலாக பரவியது. அவ்வாறு 9 பெண்களை திருமணம் செய்த வாலிபரின் பெயர் ஆர்தர் ஓ உர்சோ.

  அதுவும் தனது முதல் மனைவியின் முன்னிலையில் வைத்து 8 பெண்களை கரம் பிடித்து பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். முதன் முதலில் இவர் லுவானா கஜகி என்பவரை திருமணம் செய்துள்ளார். அதன்பிறகு பலதார உறவு முறையை தேர்ந்தெடுத்து 8 பேரை மணம் முடித்தார்.

  அப்போது அவர் கூறுகையில், இத்திருமணங்களின் மூலம் 'தனக்கு தானே இணை' என்ற மோனோகேமி முறைக்கு நான் எதிர்ப்பு தெரிவிக்கிறேன். நிபந்தனையற்ற காதலை அனைவரும் கொண்டாட வேண்டும் என்றார்.

  மேலும், பட்டியல் போட்டு 9 மனைவிகளுடனும் தாம்பத்தியத்தில் ஈடுபட்டு வந்த உர்சோவுக்கு பல சிக்கல்கள் எழுந்தன. மகிழ்ச்சியே இல்லாமல் ஏதோ கடமைக்காக தாம்பத்தியத்தில் ஈடுபடுகிறோம் என பல சமயங்களில் உர்சோ உணர்ந்துள்ளார்.

  இந்நிலையில் உர்சோவை அவரது 9 மனைவிகளில் அகதா என்ற பெண் தானாவே விட்டுச்சென்று விட்டார். அகதா உர்சோவை தனக்கு மட்டுமே கணவராக இருக்க வேண்டும் என கூறியுள்ளார். ஆனால் அது தன்னால் முடியாது என உர்சோ கூறிவிட்டார். இதனால் அகதா அவரை பிரிந்து சென்று விட்டார்.

  இதைத்தொடர்ந்து மேலும் 4 பேர் தற்போது அவரிடம் விவாகரத்து கேட்டிருக்கிறார்கள். எனவே உர்சோ தனது 9 மனைவிகளில் 4 பேரை விவாகரத்து செய்ய இருப்பதாக அறிவித்து உலகம் முழுவதும் மீண்டும் பேசுபொருளாகி இருக்கிறார்.

  எல்லோரிடமும் சீரான உறவை தொடர முடிய வில்லை என்பதுதான் தனது இந்த விவாகரத்து முடிவுக்கு காரணம் என உர்சோ கூறுகிறார்.

  தொடர்ந்து அவர் பேசுகையில், நான் இப்போது விவாகரத்து பற்றி பேசுவதற்கு காரணம் சமூகம் அழுத்தம்தான். வருங்காலத்தில் இன்னும் பல திருமணங்கள் செய்து கொள்ள ஆசைப்படுகிறேன். என் வாழ்வில் ஏன் இப்படி நடக்கிறது என தெரியவில்லை. ஆனால் என் வாழ்வில் இன்னும் பல பெண்கள் வேண்டும் என நினைக்கிறேன் என்று கூறினார்.

  Next Story
  ×