search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    இலங்கை அரசியலமைப்பின் 21-வது சட்ட திருத்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்
    X

    அதிபர் கோத்தபய ராஜபக்சே

    இலங்கை அரசியலமைப்பின் 21-வது சட்ட திருத்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்

    • 21-வது சட்டத்தின் படி அதிபா் அமைச்சரவை பாராளுமன்றத்திற்கு பொறுப்பாவாா்.
    • மக்கள் போராட்டம் காரணமாக மகிந்த ராஜபக்சே பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.

    கொழும்பு:

    இலங்கையில் தற்போதைய அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவிக்கு வந்தபோது அவருக்கு மட்டற்ற அதிகாரங்களை வழங்க வகை செய்யும் அரசியல் சாசன திருத்த மசோதா-20 ஏ நிறைவேற்றப்பட்டது.

    தற்போது கடும் பொருளாதார நெருக்கடியில் தத்தளிக்கிற அந்த நாட்டில், இந்த நிலைக்கு அதிபர் கோத்தபய ராஜபக்சே குடும்பம்தான் காரணம் எனக் கூறி அவர்கள் பதவி விலகக்கோரி மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அதில் நெருக்கடி முற்றிய நிலையில் மகிந்த ராஜபக்சே பதவி விலகினார். புதிய பிரதமராக ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்ரம சிங்கே பதவி ஏற்றார்.

    இதையடுத்து, இலங்கையில் அதிபரின் மட்டற்ற அதிகாரங்களைப் பறித்து பாராளுமன்றத்துக்கு கூடுதல் அதிகாரம் வழங்க அரசியல் சாசனத்தின் 21-வது திருத்தம் கொண்டு வரப்படும் என அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், இலங்கை அரசியலமைப்பின் 21-வது சட்டத்திருத்தத்திற்கு அந்நாட்டு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இது விரைவில் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என அமைச்சா் ஒருவா் தொிவித்தாா்.

    Next Story
    ×