என் மலர்
உலகம்

இந்திய வம்சாவளி எதிர்க்கட்சி தலைவரை நீக்கிய சிங்கப்பூர் பிரதமர்
- பிரிதம் சிங் தொழிலாளர் கட்சி பொதுச் செயலாளராக உள்ளார்.
- முன்னாள் எம்.பி. வழக்கில் பொய் சொன்ன குற்றச்சாட்டில், நீதிமன்றம் குற்றவாளி என அறிவித்திருந்தது.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரிதம் சிங், தொழிலாளர் கட்சியின் பொதுச் செயலாளராக இருக்கிறார். இவர் சிங்கப்பூர் பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவராகவும் உள்ளார். இந்த நிலையில் சிங்கபூர் பிரதமர் லாரன்ஸ் வாங், பிரதம் சிங்கை அவரது எதிர்க்கட்சி பதவியில் இருந்து நீக்கியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் "இந்த விஷயத்தை கவனமாகப் பரிசீலித்த பிறகு, பிரிதம் சிங்கின் குற்றவியல் தண்டனைகளும், அவர் அந்த பதவிக்குத் தகுதியற்றவர் என்பது குறித்த நாடாளுமன்றத்தின் ஆழமான கருத்தும் சேர்ந்து, அவர் எதிர்க்கட்சித் தலைவராகத் தொடர்வது இனி சாத்தியமில்லை என்று நான் முடிவு செய்துள்ளேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் எதிர்க்கட்சி உடனடியாக மாற்று எதிர்க்கட்சி தலைவரை நியமனம் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
49 வயதாகும் பிரிதம் சிங், தொழிலாளர்கள் கட்சியின் பொதுச் செயலாளராக உள்ளார். இவர் முன்னாள் எம்.பி. ரயீஷா கான் வழக்கில், பாராளுமன்ற நிலைக்குழு முன் பொய் கூறினார். இதனால் நீதிமன்றம் குற்றவாளியாக அறிவித்தது. அவருக்கு 10,700 அமெரிக்க டாலர் அபராதம் விதிக்கப்பட்டது.






