search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    லைவ் அப்டேட்ஸ்: தெற்கு உக்ரைன் நகரமான மைகோலாய்வில் குண்டு வெடிப்பு
    X

    லைவ் அப்டேட்ஸ்: தெற்கு உக்ரைன் நகரமான மைகோலாய்வில் குண்டு வெடிப்பு

    • கிழக்குப் பகுதியில் ரஷியப் படைகளின் புதிய தாக்குதல்களை முறியடித்திருப்பதாக உக்ரைன் தகவல்.
    • மேற்கத்திய நாடுகளின் விண்வெளித் துறை, போரை நோக்கிச் செல்வதாக ரஷிய அரசு விண்வெளிக் கழகம் தகவல்


    Live Updates

    • 21 Jun 2022 1:23 AM GMT

      பாதுகாப்பு சேவைகளில் ரஷியாவிற்கு ஆதரவாக இருப்பதாக அடையாளம் காணப்பட்ட தரப்புகளை தடைசெய்ய அதிபர் ஜெலன்ஸ்கி கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், நாட்டின் மிகப்பெரிய ரஷிய சார்பு அரசியல் கட்சிக்கு உக்ரைன் நீதிமன்றம் நேற்று தடை விதித்தது. உக்ரைனின் இறையாண்மையை குறைமதிப்பிற்கு உட்படுத்தியதற்காக இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது. மேலும் நாடு முழுவதும் உள்ள ரஷிய சார்பு அரசியல் கட்சியின் சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    • 20 Jun 2022 9:20 PM GMT

      உக்ரைன் தலைநகர் கீவில் நேற்று செய்தியாளர்களை அதிபர் ஜெலன்ஸ்கி கூறுகையில், கிழக்குப் பகுதியில் ரஷிய படைகளின் புதிய தாக்குதல்களை உக்ரைன் முறியடித்தது. நாங்கள் தெற்கு உக்ரைன் பகுதியை யாருக்கும் விட்டுக்கொடுக்க மாட்டோம். எங்களுடையது அனைத்தையும் திருப்பி பெறுவோம். கருங்கடல் உக்ரேனியர்களுடையதாகவும் பாதுகாப்பாகவும் மாறும் என தெரிவித்தார்.

    • 20 Jun 2022 4:43 PM GMT

      ரஷிய படைகள் இன்று கிழக்கு உக்ரைனில், முன்களப் பகுதியில் உள்ள ஆற்றின் கரையோரப் பகுதியைக் கைப்பற்றி உள்ளன. ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரைன் சேரும் விண்ணப்பம் குறித்து ஐரோப்பிய தலைவர்கள் மாநாட்டில் விவாதிக்க உள்ளனர். இந்த மாநாட்டிற்கு முன்னதாக ரஷியா தாக்குதல்களை அதிகரிக்கும் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கணித்திருந்தார். 

    • 20 Jun 2022 4:29 PM GMT

      கிரீமிய எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனத்திற்கு சொந்தமான எண்ணெய் தூரப்பண மேடைகளை உக்ரைன் படைகள் தாக்கியதாக, ரஷியாவால் இணைக்கப்பட்ட கிரீமியா தீபகற்பத்தின் தலைவர் கூறினார். இதையடுத்து, உக்ரைன் கட்டுப்பாட்டில் உள்ள கருங்கடல் துறைமுகமான ஒடேசாவில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. ஏவுகணை தாக்குதல்களில், துறைமுகத்தில் உள்ள உணவு குடோன் அழிந்துவிட்டதாக உக்ரைன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழப்பு ஏற்பட்டதாக தகவல் இல்லை. 

    • 20 Jun 2022 4:20 PM GMT

      உக்ரைனில் உள்ள மிகப்பெரிய ரஷிய ஆதரவு அரசியல் கட்சிக்கு உக்ரைன் நீதிமன்றம் தடை விதித்தது. மேலும் நாட்டின் இறையாண்மைக்கு எதிராக செயல்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டிருப்பதால், நாடு முழுவதும் அதன் சொத்துக்களை பறிமுதல் செய்யப்பட்டது.

    • 20 Jun 2022 9:31 AM GMT

      ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரைன் இணைவது குறித்து விரைவில் முடிவு செய்யப்பட உள்ளதால் ரஷியாவிடம் இருந்து அதிக தாக்கதல்களை எதிர்பார்ப்பதாக அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரைன் நிலை குறித்த ஐரோப்பிய ஒன்றியத்தின் நேர்மறையான முடிவு மட்டுமே தனது நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயம் செய்யும் என்றும், இது முழு ஐரோப்பாவின் நலன்களையும் பூர்த்தி செய்யும் என்றும் அவர் கூறியுள்ளார்.

    • 20 Jun 2022 9:21 AM GMT

      செவெரோடோனெட்ஸ்க் நகரின் புறநகர் பகுதிகளை ரஷிய படைகள் கைப்பற்றியுள்ளதாக உக்ரைன் ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  போர் தொடர்ந்து வருவதால், ரஷியப் படைகள் பீரங்கி மற்றும் வான்வழித் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளன என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

    • 19 Jun 2022 11:44 PM GMT

      உக்ரைனில் நடந்து வரும் போர் நடவடிக்கையானது உலகளாவிய அகதிகள் நெருக்கடியில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது மற்றும் உணவுப் பஞ்சத்தின் அளவையும் அதிகரித்துள்ளது. தேவை அதிகரிப்பு, போதிய நிதியின்மையால் கிழக்கு மற்றும் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள அகதிகளுக்கான ரேஷன் பொருள்களை பாதியாக குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என ஐ.நா.வின் உலக உணவு திட்ட அமைப்பு தெரிவித்துள்ளது.

    • 19 Jun 2022 6:56 PM GMT

      கிழக்கு உக்ரைனில் உள்ள சீவிரோடோனெட்ஸ்க்கை நோக்கிய தாக்குதல் வெற்றிகரமாக சென்று வருகிறது என ரஷிய பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இகோர் கொனாஷென்கோவ் வீடியோ அறிக்கையில் தெரிவித்துள்ளார். நகரின் கிழக்கு புறநகரில் உள்ள மெட்யோல்கையின் பகுதி கைப்பற்றப்பட்டது என அவர் தெரிவித்தார்.

    • 19 Jun 2022 11:35 AM GMT

      உக்ரைனில் ஆண்டுக்கணக்கில் போர் நீடிக்கும் என்று நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் எச்சரித்துள்ளார். இந்த போரில் உக்ரைனுக்கு தொடர்ந்து ஆதரவளிக்க மேற்கு நாடுகள் தயாராக வேண்டும் என்றும் அவர் கூறி உள்ளார்.

      உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெற்கு பகுதியில் உள்ள முள்களப் படைகளை இன்று முதல் முறையாக பார்வையிட்டார். அப்போது, நாட்டின் தெற்கு பகுதியை ரஷியாவிடம் தனது படைகள் விட்டுக்கொடுக்காது என்று சபதம் செய்த நிலையில், நேட்டோ பொதுச்செயலாளர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார். கிழக்குப் பகுதியில் ரஷியப் படைகளின் புதிய தாக்குதல்களை முறியடித்திருப்பதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. 

    Next Story
    ×