search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    பல மைனர் சிறுமிகள் மீது பாலியல் தாக்குதல்: மதகுருவை தேடும் பிலிப்பைன்ஸ் காவல்துறை
    X

    பல மைனர் சிறுமிகள் மீது பாலியல் தாக்குதல்: மதகுருவை தேடும் பிலிப்பைன்ஸ் காவல்துறை

    • க்விலேரியோ ஏசுநாதரின் மறுஅவதாரமாக தன்னை அறிவித்து கொண்டுள்ளார்
    • இந்த அமைப்பிற்கு 3500க்கு மேற்பட்டோர் ஆதரவாளராக உள்ளனர்

    தென்கிழக்காசிய நாடான பிலிப்பைன்ஸில் உள்ளது மிண்டனாவ் நகரம்.

    இந்நகரத்தில் தற்போது ஒமேகா டி சலோனேரா (Omega de Salonera) என்றும் முன்னர் சொக்கோரோ பயனிஹான் சேவைக்குழு (Soccoro Bayanihan Services) என்றும் அழைக்கப்பட்ட ஒரு மத அமைப்பு செயல்படுகிறது. தன்னை பின்பற்றுபவர்களை தவிர வேறு எவராலும் எளிதில் உள்ளே நுழைய முடியாதவாறு ஆயுதமேந்திய காவலர்கள் சூழ, அதன் தலைவர் ஜே ரென்ஸ் பி க்விலேரியோ (Jey Rence B Quilario) என்பவரால் ஒரு மலைப்பகுதியில் இது செயல்படுகிறது.

    2019ல் அந்த பிராந்தியத்தில் ஏற்பட்ட தொடர் நிலநடுக்கத்திற்கு பிறகு அச்சத்தில் வாழ்ந்து வந்த மக்களிடம், உலகம் அழிய போவதாகவும் அதிலிருந்து தப்ப தன்னிடம் சரணடையுமாறும் கூறி மூளை சலவை செய்துள்ளார். ஏசுநாதரின் மறுஅவதாரமாக தன்னை அறிவித்து கொண்டுள்ள க்விலேரியோ மீது அவரது ஆதரவாளர்கள் முழு நம்பிக்கை வைத்துள்ளனர்.

    உறுப்பினர்களிடம் பெருகின்ற நிதியிலிருந்தும், போதை மருந்து கடத்தல் மூலமாகவும் நிதி பெறும் இந்த அமைப்பில் சுமார் 1600 குழந்தைகள் உட்பட 3,500 பேருக்கும் மேல் நம்பிக்கையாளர்களாக உள்ளனர்.

    சில தினங்களுக்கு முன்னால் 8 குழந்தைகள் அங்கிருந்து தப்பித்து வந்தனர். அங்கு நடைபெறும் கொடுமைகள் குறித்து அவர்கள் காவல்துறையிடம் வாக்குமூலம் தெரிவித்துள்ளனர்.

    க்விலேரியோ, மைனர் சிறுமிகள் மீது பாலியல் தாக்குதல் நடத்துவதாகவும், அங்குள்ள ஆண்களுக்கு அச்சிறுமிகளை கட்டாய திருமணம் செய்து வைப்பதாகவும், அதற்கு அச்சிறுமிகளின் பெற்றோர்களும் ஒப்பு கொள்வதாகவும், அந்த மலைப்பகுதியில் வசிக்கும் பிற சிறுமிகள் மீதும் அவர் பாலியல் தாக்குதல்களில் ஈடுபடுவதாகவும் புகாரளித்தனர்.

    தற்போது இவர் மீது நடவடிக்கை எடுக்க விசாரணை அமைப்புகள் தீவிரமாக இறங்கியுள்ளன.

    Next Story
    ×