என் மலர்
கத்தார்
- கத்தாா் நாட்டிற்கு 3 நாள் அரசு முறை பயணமாக துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு சென்று உள்ளாா்.
- இந்தியா-கத்தார் ஸ்டார்ட்-அப் பாலத்தை துணை ஜனாதிபதி தொடங்கி வைத்துப் பேசினார்.
தோகா:
துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு 3 நாடுகளுக்கான தமது சுற்றுப்பயணத்தின் இறுதிக்கட்டமாக கத்தார் நாட்டிற்கு சென்றுள்ளார். அங்கு அந்நாட்டு பிரதமரும் உள்துறை மந்திரியுமான ஷேக் காலித் பின் அப்துல் அஜிஸ் அல் தானியை சந்தித்துப் பேச்சு வார்த்தை நடத்தினார்.
வர்த்தகம், முதலீடு, பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.
இந்தியா-கத்தார் ஸ்டார்ட்-அப் பாலத்தை தொடங்கி வைத்து பேசிய வெங்கையா நாயுடு, கத்தாருடன் இந்தியா மிகவும் வலுவான பொருளாதாரக் கூட்டணியை கொண்டுள்ளது. அது வளமடைந்து வருகிறது என தெரிவித்தார்.
மேலும், இந்தியா-கத்தார் வணிக நிகழ்ச்சியில் பங்கேற்ற அவா், அங்கு வாழும் இந்திய தொழிலதிபா்களைச் சந்தித்து அவா்களுடன் கலந்துரையாடினாா்.
இந்நிலையில், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தோகாவில் உள்ள கத்தாா் தேசிய அருங்காட்சியகத்திற்குச் சென்று பாா்வையிட்டாா்.
- கத்தாருக்கு பயணம் மேற்கொண்ட குடியரசு துணைத்தலைவர் வெங்கையாநாயுடு, அந்நாட்டு பிரதமரை சந்தித்தார்.
- இந்தியாவின் எரிவாயுத் தேவைகளில் 40 சதவீதத்தை கத்தார் பூர்த்தி செய்கிறது.
தோஹா:
குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு மூன்று நாடுகளுக்கான தமது பயணத்தின் கடைசிக் கட்டமாக கத்தார் சென்றுள்ளார். நேற்று கத்தார் பிரதமரும் உள்துறை அமைச்சருமான ஷேக் காலித் பின் அப்துல்அஜிஸ் அல் தானியுடன் வெங்கையா நாயுடு பேச்சு நடத்தினார்.
அப்போது பேசிய அவர், இந்தியாவில் கத்தாரின் முதலீடு மார்ச் 2020ல் இருந்து ஐந்து மடங்கு வளர்ச்சியடைந்துள்ளது என்று பாராட்டினார். கத்தாரில் சுகாதாரத் துறையில் இந்திய சுகாதார வல்லுநர்கள் ஆற்றிய பங்களிப்பை அவர் நினைவு கூர்ந்தார்.
இந்தியா அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிற்கு அதிக எண்ணிக்கையிலான மருந்துகளை வழங்குகிறது என்றும், பாரம்பரிய மருத்துவத் துறையில் கத்தாருடன் இணைந்து பணியாற்றுவதில் இந்தியாவும் மகிழ்ச்சி அடைவதாக அவர் குறிப்பிட்டார்.
இந்தியாவின் எரிவாயுத் தேவைகளில் 40 சதவீதத்தை கத்தார் பூர்த்தி செய்வதாக குறிப்பிட்ட அவர், எரிசக்தி பாதுகாப்பில் கத்தாரின் பங்கை இந்தியா ஆழமாக மதிக்கிறது என்றார்.
இதை தொடர்ந்து தோஹாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்தியா-கத்தார் ஸ்டார்ட்-அப் பாலத்தை தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், கத்தாருடன் இந்தியா மிகவும் வலுவான பொருளாதாரக் கூட்டணியை கொண்டுள்ளது, மேலும் அது வளமடைந்து வருகிறது என்றார்






