search icon
என் மலர்tooltip icon

    உலகம் (World)

    பிஜியை தொடர்ந்து, திமோர்-லெஸ்டே நாட்டின் உயரிய விருதுபெற்ற ஜனாதிபதி திரவுபதி முர்மு
    X

    பிஜியை தொடர்ந்து, திமோர்-லெஸ்டே நாட்டின் உயரிய விருதுபெற்ற ஜனாதிபதி திரவுபதி முர்மு

    • ஜனாதிபதி திரவுபதி முர்மு 3 நாடுகளுக்கான சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
    • பிஜி நாட்டின் உயரிய கம்பானியன் ஆப் தி ஆர்டர் என்ற விருது ஜனாதிபதிக்கு அளிக்கப்பட்டது.

    திலி:

    ஜனாதிபதி திரவுபதி முர்மு 3 நாடுகளுக்கான சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். முதல் கட்டமாக பிஜி நாட்டுக்கு சென்ற ஜனாதிபதி முர்மு, அந்நாட்டு அதிபர் ரது வில்லியம் மைவாலிலி கடோனிவியர் மற்றும் பிரதமர் சிதிவேனி ரபுகா ஆகியோரைச் சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தினார்.

    இதற்கிடையே, பிஜி நாட்டின் உயரிய கம்பானியன் ஆப் தி ஆர்டர் என்ற விருது ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு அளிக்கப்பட்டது. அவருக்கு பிஜி நாட்டின் அதிபர் ரது வில்லியம் விருது வழங்கி கவுரவித்தார். இந்தியா-பிஜி நாடுகளுக்கு இடையிலான வலிமையான உறவுகளை அங்கீகரிக்கும் வகையில் இந்த கவுரவம் வழங்கப்பட்டது.

    அதன்பின், 2வது கட்டமாக ஜனாதிபதி திரவுபதி முர்மு நியூசிலாந்து சென்றடைந்தார். அங்கு நியூசிலாந்து பிரதமா் கிறிஸ்டோபா் லக்சனை ஜனாதிபதி திரவுபதி முா்மு சந்தித்தாா். கல்வி, வா்த்தகம் மற்றும் கலாசாரம் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான தங்கள் உறுதிப்பாட்டை இரு தரப்பினரும் மீண்டும் வலியுறுத்தினா். வெலிங்டனில் நடந்த நியூசிலாந்து சா்வதேச கல்வி மாநாட்டில் திரவுபதி முா்மு பங்கேற்று உரையாற்றினாா்.

    இந்நிலையில், ஜனாதிபதி திரவுபதி முர்மு தனது பயணத்தின் மூன்றாவது கட்டமாக இன்று திமோர்-லெஸ்தே சென்றடைந்தார்.

    அங்கு அதிபர் ஜோஸ் ராமோஸ் அந்நாட்டின் உயரிய விருதான கிராண்ட்-காலர் ஆப் தி ஆர்டர் விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு அளித்து கவுரவிக்கப்பட்டார் என ராஜ்பவன் தெரிவித்துள்ளது.

    சமீபத்தில் பிஜி நாட்டின் உயரிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்மு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×