search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    ராணி எலிசபெத் மறைவு - நேபாள அரசு 3 நாட்கள் துக்கம் அனுசரிக்க முடிவு
    X

    ராணி எலிசபெத்

    ராணி எலிசபெத் மறைவு - நேபாள அரசு 3 நாட்கள் துக்கம் அனுசரிக்க முடிவு

    • இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத் உடல் நலக் குறைவால் காலமானார்.
    • ராணி எலிசபெத்தின் மறைவுக்கு 3 நாட்கள் துக்கம் அனுசரிப்பதாக நேபாள அரசு முடிவு செய்துள்ளது.

    காத்மண்டு:

    இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத் உடல் நலக் குறைவால் காலமானார். 25வது வயதில் ராணியாக பதவியேற்ற எலிசபெத் ராணி சுமார் 70 ஆண்டுகாலம் ராணியாக பதவி வகித்துள்ளார். ராணியின் மறைவுக்கு உலக தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், நேபாள அரசின் அமைச்சரவைக் கூட்டத்தில் இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கப்பட்டது. மேலும், செப்டம்பர் 10 முதல் செப்டம்பர் 12-ம் தேதி வரை துக்கம் அனுசரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    வெளிநாடுகளில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் நேபாள தூதரகங்களில் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×