என் மலர்tooltip icon

    உலகம்

    உலகின் மிகப்பெரிய லூவ்ரே அருங்காட்சியகத்தில் நெப்போலியன் மன்னன் நகைகள் திருட்டு
    X

    உலகின் மிகப்பெரிய லூவ்ரே அருங்காட்சியகத்தில் நெப்போலியன் மன்னன் நகைகள் திருட்டு

    • நாள் ஒன்றுக்கு 30 ஆயிரம் பார்வையாளர்கள் வரும் மிகப்பெரிய அருட்காட்சியகமாகும்.
    • நெப்போலியன் மன்னன் நகைகளில் சிலவற்றை திருடிச் சென்றுள்ளனர்.

    உலகின் மிகப்பெரிய அருங்காட்சியகமான லூவ்ரே அருங்காட்சியகம் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் உள்ளது. இது சுமார் 6,52,300 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த அருட்காட்சியகத்தில் வரலாற்று சிறப்புமிக்க பொருட்கள், ஓவியங்கள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன.

    இங்குள்ள அரிய பொக்கிசங்களை திருடர்கள் திருடிச் செல்லும் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இந்த நிலையில் இன்று நெப்போலியன் மன்னன் பயன்படுத்தி நகைகளை இங்கிருந்து கொள்ளையர்கள் அபேஸ் செய்துள்ளனர்.

    ஹைட்ராலிக் ஏணியை பயன்படுத்தி கொள்ளையர்கள் அறைக்குள் நுழைந்து கொள்ளை அடித்துள்ளனர். இது மிகப்பெரிய கொள்கை என பிரான்ஸ் உள்துறை அமைச்சர் லாரன்ட் நுனேஸ் தெரிவித்துள்ளார்.

    நெப்போலியன் மற்றும் பேரரசின் நகை கலெக்ஷனில் இருந்து 9 நகைகளை திருடிச் சென்றுள்ளனர். அருட்காட்சியகம் இது தொடர்பாக உடனடி கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை. இந்த திருட்டைத் தொடர்ந்து அருட்காட்சியகம் மூடப்பட்டது.

    இந்த அருட்காட்சியகத்திற்கு நாள் ஒன்றுக்கு சுமார் 30 ஆயிரம் பேர் வந்து செல்கிறார்கள். இது பழங்காலப் பொருட்கள், சிற்பங்கள் மற்றும் ஓவியங்கள் உட்பட 33,000 க்கும் மேற்பட்ட கலைப்பொருட்களைக் கொண்டுள்ளது.

    இங்குள்ள மோனலிசா படம் கடந்த 1911ஆம் ஆண்டு திருடப்பட்டது. பின்னர் 2 ஆண்டுகளுக்குப் பிறகு மீட்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×