என் மலர்tooltip icon

    உலகம்

    லைவ் அப்டேட்ஸ்: கிராமடோர்ஸ்க் நகரில் வான் தாக்குதல்- உயிரிழப்புகள் ஏற்பட்டதாக தகவல்
    X

    லைவ் அப்டேட்ஸ்: கிராமடோர்ஸ்க் நகரில் வான் தாக்குதல்- உயிரிழப்புகள் ஏற்பட்டதாக தகவல்

    • உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் தாக்குதல் 5வது மாதமாக நீடிக்கிறது.
    • ரஷியாவின் கட்டுப்பாட்டில் உள்ள மெலிடோபோல் நகரில் உக்ரைன் படைகள் இன்று உக்கிரமான தாக்குதலை நடத்தி உள்ளன.


    Live Updates

    • 1 July 2022 11:20 AM IST

      ஸ்னேக் தீவில் இருந்து ரஷிய படைகள் வெளியேறிய சில மணி நேரங்களில் உக்ரைன் தெற்கு பகுதியில் உள்ள கடற்கரை நகரமான ஓடேசாவில் உள்ள பெரிய அடுக்கு மாடி குடியிருப்பு கட்டிடம் மீது ரஷியா சரமாரியாக ஏவுகணை தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலில் அந்த கட்டிடம் சேதம் அடைந்தது. இதில் இடிபாடுகளுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே 3 குழந்தைகள் உள்பட 6 பேர் இறந்தனர். மேலும் 4 பேரின் உடல்கள் கைப்பற்றப்பட்டன. இதனால் பலி எண்ணிக்கை 10-ஆக உயர்ந்துள்ளது.

    • 1 July 2022 6:08 AM IST

      ரஷியாவின் அச்சுறுத்தலை தொடர்ந்து ஐரோப்பியாவில் அமெரிக்கப் படைகள் அதிகரிக்கப்படும் என அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், நேட்டோ அமைப்பு வலுவானது மற்றும் ஒன்றுபட்டது. உச்சி மாநாட்டில் எடுக்கும் நடவடிக்கைகள் மூலம் எங்களின் கூட்டு பலத்தை மேலும் அதிகரிக்கப் போகிறோம். புதிய அமெரிக்க போர்கப்பல்கள் ஸ்பெயினுக்கும், போர் விமானங்கள் இங்கிலாந்துக்கும், தரைப்படைகள் ருமேனியாவுக்கும் அனுப்பப்படும். பால்டிக் பிராந்தியத்திற்கு சுழற்சி முறையில் வீரர்களை அமெரிக்கா அனுப்பி வருகிறது என தெரிவித்தார்.

    • 1 July 2022 12:42 AM IST

      நேட்டோ உறுப்பினர் நாடுகளாக சுவீடன், பின்லாந்து வருவதற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வரவேற்றார். இதற்காக முத்தரப்பு நாடுகளுடனான கையெழுத்து ஒன்று ஒப்பந்தம் ஆனது. இதனை முன்னிட்டு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் துருக்கிக்கு தனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டார்.

      இதுதொடர்பாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில் சுவீடன், பின்லாந்து ஆகிய இரு நாடுகளும் நேட்டோவின் உறுப்பினராவது அதன் கூட்டு பாதுகாப்புக்கு வலிமை சேர்க்கும். இதற்காக சுவீடன், பின்லாந்து மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் மேற்கொண்ட முத்தரப்பு ஒப்பந்தத்திற்கு வாழ்த்துகள் என தெரிவித்தார்.

    • 30 Jun 2022 7:31 PM IST

      7,000 டன் தானியங்கள் ஏற்றப்பட்ட கப்பல் உக்ரைன் துறைமுகத்தை விட்டு வெளியேறியதாக ரஷிய ஆதரவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • 30 Jun 2022 7:30 PM IST

      6000-க்கும் மேற்பட்ட உக்ரைன் போர் கைதிகளை ரஷியா பிடித்து வைத்துள்ளதாக அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் கூறியிருக்கிறது. 

    • 30 Jun 2022 7:28 PM IST

      அணுஆயுத பரவல் தடை தொடர்பான பேச்சுவார்த்தைக்கு ரஷியா தயாராக உள்ளது என அதிபர் புதின் தெரிவித்துள்ளார்

    • 30 Jun 2022 3:08 PM IST

      சுட்ழா நுழைவாயிலிருந்து உக்ரைன் வழியாக ஐரோப்பாவிற்கு எரிவாயு விநியோகம் செய்யப்படுகிறது. இது நேற்று 42.1 எம்சிஎம் உடன் ஒப்பிடும்போது இன்று 42.2 மில்லியன் கன மீட்டர் ஆகக் காணப்பட்டது. சோக்ரானோவ்கா நுழைவுப் புள்ளி வழியாக எரிவாயு வழங்குவதற்கான விண்ணப்பம் மீண்டும் உக்ரைனால் நிராகரிக்கப்பட்டது என்று ரஷிய எரிவாயு உற்பத்தியாளர் கஸ்ப்ரோம் தெரிவித்துள்ளார்.


    • 30 Jun 2022 3:01 PM IST

      ரஷியா- உக்ரைன் போரில், ஸ்வீடன் மேலும் டாங்கி எதிர்ப்பு ஆயுதங்கள் மற்றும் இயந்திர துப்பாக்கிகளை உக்ரைனுக்கு அனுப்பும் என்று ஸ்வீடனின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    • 30 Jun 2022 6:39 AM IST

      கிழக்கு உக்ரைன் நகரங்களில் ஒன்றான லிசிசான்ஸ்க் மீது ரஷிய படைகள் தொடர்ந்து வெடிகுண்டு தாக்குதல் நடத்தி வருகிறன. 15,000 பேர் இன்னும் எஞ்சியிருக்கும் அந்த நகரை கைப்பற்ற ரஷியப் படைகள் தொடர்ந்து முயற்சித்து வருவதாக ராணுவ நிர்வாகத்தின் தலைவர் தெரிவித்தார். புறநகர் பகுதியில் சண்டை தொடர்கிறது என்றும், உக்ரைன் படைகள் ரஷிய ராணுவ முகாம்களை தாக்கி வருகின்றன என்றும் அவர் கூறியுள்ளார்.

    • 30 Jun 2022 6:38 AM IST

      ஸ்வீடனும் பின்லாந்தும் நேட்டோவில் இணைந்தால் ரஷியாவுக்கு கவலை இல்லை என்று அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார். எனினும் நேட்டோ ராணுவக் குழுக்கள் மற்றும் ராணுவ உள்கட்டமைப்புகள் மூலம் ரஷியாவிற்கு எதிரான எந்தவொரு அச்சுறுத்தல்களுக்கும் பதிலடி கொடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.

    Next Story
    ×