என் மலர்
உலகம்

அமெரிக்காவில் லாரி மோதி 3 பேர் பலி- கைதான இந்தியருக்கு 45 ஆண்டுகள் ஜெயில் தண்டனை கிடைக்க வாய்ப்பு
- விபத்தை ஏற்படுத்தியதாகக் கூறி சிங் கைது செய்யப்பட்டார்.
- மற்ற இருவரின் குடியேற்ற தகவல்கள் குறித்து விபரம் வெளியாகவில்லை.
புளோரிடா:
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் கடந்த மாதம் 12-ந்தேதி இந்திய வம்சாவளியை சேர்ந்த அரி ஜிந்தர் சிங் என்பவர் தேசிய நெடுஞ்சாலையில் கனரக லாரியை ஓட்டிச் சென்றார். அப்போது திடீரென திரும்ப முயன்றபோது வேகமாக வந்த மினிவேன் ஒன்று மோதியது. இதில் மினிவேனில் பயணம் செய்த 3 பேர் உயிரிழந்தனர்.
தேசிய நெடுஞ்சாலையில் சட்டவிரோதமாக திரும்பிய போது விபத்தை ஏற்படுத்தியதாகக் கூறி சிங் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் விபத்தில் பலியான 3 பேரின் விவரங்கள் தெரிய வந்து உள்ளது. அவர்கள் 3 பேரும் ஹைதி நாட்டைச் சேர்ந்தவர்கள். அவர்கள் ஹெர்பி டுப் ரெஸ்னே, (30), பானியோலா ஜோசப், (27), மற்றும் ரோட்ரிக் டோர், (53) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
டுப்ரெஸ்னே கடந்த 2023-ம் ஆண்டு ஹைதியின் போர்ட்-ஓ-பிரின்சில் இருந்து மியாமிக்கு குடியேறியதாக தெரிய வந்துள்ளது. 2 ஆண்டுகள் உரிமம் பெற்று அவர் அமெரிக்காவில் தங்கி வேலை செய்து வந்துள்ளார். மற்ற இருவரின் குடியேற்ற தகவல்கள் குறித்து விபரம் வெளியாகவில்லை.
இந்த 3 பேரும் மினி வேனில் இண்டியானாவை நோக்கி சென்று கொண்டி ருந்தபோது அரி ஜிந்தர் சிங் ஓட்டி வந்த டிரக்கில் மோதி உயிரிழந்தது. சட்ட விரோதமாக பஞ்சாபை சேர்ந்த அரி ஜிந்தர் சிங் கடந்த 2018-ம் ஆண்டு சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் நுழைந்து உள்ளார்.
அரிஜிந்தர் சிங் தற்போது புளோரிடாவில் உள்ள ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு 45 ஆண்டுகள் ஜெயில் தண்டனை வழங்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தநிலையில், அரிஜிந் தர் சிங்கின் குடும்பத்தினர் அவருக்குக் குறைந்தபட்ச தண்டனை வழங்குமாறும், அமெரிக்கா கருணைக் காட்ட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.






