search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    அமெரிக்கா தலைமை தாங்குவதை இந்தியா விரும்பவில்லை: நிக்கி ஹாலே
    X

    அமெரிக்கா தலைமை தாங்குவதை இந்தியா விரும்பவில்லை: நிக்கி ஹாலே

    • அமெரிக்காவுடன் இந்தியா ஒரு கூட்டாளியாக இருக்க விரும்புகிறது.
    • அமெரிக்கர்கள் வெற்றி பெறவும், வழி நடத்துவதும் இந்தியா நம்பவில்லை. நாங்கள் பலவீனமாக இருப்பதாக அவர்கள் பார்க்கிறார்கள்.

    அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் மாதம் நடைபெறுகிறது. இதில் குடியரசு கட்சி சார்பில் வேட்பாளராக களமிறங்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப்- இந்திய வம்சாவளியை சேர்ந்தவரும், தெற்கு கரோலினா முன்னாள் கவர்னருமான நிக்கி ஹாலே இடையே போட்டி நிலவுகிறது. இதில் டிரம்ப் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். நிக்கி ஹாலேவுக்கு கட்சி பிரதிநிதிகளிடம் ஆதரவு இல்லை.

    இந்தநிலையில் இந்தியா மீது நிக்கி ஹாலே திடீர் குற்றச்சாட்டுகளை கூறி உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    அமெரிக்காவுடன் இந்தியா ஒரு கூட்டாளியாக இருக்க விரும்புகிறது. ஆனால் தற்போது அவர்கள் (இந்தியா) அமெரிக்கா தலைமை தாங்குவதை நம்பவில்லை. தற்போதைய உலகளாவிய சூழ்நிலையில் இந்தியா புத்திசாலித்தனமாக விளையாடி ரஷியாவுடன் நெருக்கமாக இருக்கிறது. ரஷியாவிடம் இருந்து ராணுவ உபகரணங்களை வாங்குகிறார்கள்.

    நான் இந்தியாவை கையாண்டிருக்கிறேன். அமெரிக்கர்கள் வெற்றி பெறவும், வழி நடத்துவதும் இந்தியா நம்பவில்லை. நாங்கள் பலவீனமாக இருப்பதாக அவர்கள் பார்க்கிறார்கள். சீனா, பொருளாதார ரீதியாக நன்றாக இல்லை. அந்த நாடு அமெரிக்காவுடன் பல ஆண்டுகளாக போருக்கு தயாராகி வருகிறது. அது அவர்களுக்கு தவறாக முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தேர்தல் பிரசாரத்தின்போது நிக்கி ஹாலேவை இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் என்று டிரம்ப் விமர்சனம் செய்தார். இதையடுத்து அதை தவிர்ப்பதற்காக இந்தியா மீது நிக்கி ஹாலே திடீரென்று குற்றச்சாட்டுக்களை கூறியிருப்பதாக கருதப்படுகிறது.

    Next Story
    ×