என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உலகம்
X
பாகிஸ்தானில் கனமழை - வெள்ளம், மழை சார்ந்த விபத்தில் சிக்கி 23 பேர் பலி
Byமாலை மலர்27 Jun 2023 8:31 PM GMT
- பாகிஸ்தானில் கனமழை பெய்து வருகிறது.
- வெள்ளம், மழை சார்ந்த விபத்துகளில் சிக்கி 23 பேர் பலியாகினர்.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் நேற்று கனமழை பெய்தது. ஷேக்புரா, நரொவெல் ஆகிய மாவட்டங்களில் கனமழை நீடித்து வருகிறது. கனமழை காரணமாக ஒரு சில பகுதிகளில் நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், பாகிஸ்தானில் கனமழை பெய்து வரும் நிலையில் நரோவால் மாவட்டத்தில் 5 பேரும், ஷேக்புரா மாவட்டத்தில் 2 பேர் என 7 பேர் உள்பட மின்னல் தாக்கி 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 7 பேர் வெள்ளத்தில் மூழ்கியும், மின்சாரம் தாக்கி 6 பேரும் பலியாகினர்.
மின்னல் தாக்கியும், மின்சாரம் தாக்கியும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வரும் 30-ம் தேதி வரை நாட்டின் பல்வேறு மாகாணங்களில் கனமழை பெய்யக்கூடும் என பாகிஸ்தான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Next Story
×