search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    பாகிஸ்தானில் கடுங்குளிரால் அதிகரிக்கும் நிமோனியா: 36 குழந்தைகள் பலி
    X

    பாகிஸ்தானில் கடுங்குளிரால் அதிகரிக்கும் நிமோனியா: 36 குழந்தைகள் பலி

    • பஞ்சாப் மாகாணத்தில் கடுங்குளிர் காரணமாக குழந்தைகளுக்கு நிமோனியா வேகமாக பரவுகிறது.
    • கடந்த வருடம் 990 பேர் உயிரிழந்ததால், அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் தீவிரம்.

    பாகிஸ்தானில் கடுங்குளிர் நிலவி வருகிறது. குறிப்பாக பஞ்சாப் மாகாணத்தில் அதிக அளவில் குளிர் வாட்டி வதைக்கிறது. கடுங்குளிர் காரணமாக குழந்தைகள் பெருமளவில் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்படுகின்றனர். அப்படி பாதிக்கப்பட்ட குழந்தைகளில் 36 பேர் கடந்த வாரம் உயிரிழந்ததாக பஞ்சாப் மாகாண அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    மேலும், நிமோனியாவால் பாதிக்கப்படும் குழந்தைகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், வருகிற 31-ந்தேதி வரை பள்ளிகளில் காலை கூட்டத்திற்கு (morning assemblies) தடைவிதிக்கப்பட்டுள்ளது. நர்சரி குழந்தைகளுக்கு வருகிற 19-ந்தேதி வரை தடுப்பூசி செலுத்த அறிவிக்கப்பட்டள்ளது.

    மேலும் குழந்தைகள் மாஸ்க் அணிய வேண்டும். கைகளை சுத்தமாக கழுவ வேண்டும். வெதுவெதுப்பான ஆடைகள் அணிய வேண்டும். இவைகள் நிமோனியா தொற்றிக் கொள்வதில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    லாகூர் குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள குழந்தைகளில் 10-ல் 8 பேர் நிமோனியால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த வருடம் பஞ்சாப் மாகாணத்தில் 990 குழந்தைகள் நிமோனியாவால் உயிரிழந்துள்ளனர். அதேபோன்று பலி எண்ணிக்கை அதிகரிக்குமோ? என அதிகாரிகள் கவலை அடைந்துள்ளனர்.

    நிமோனியாவில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பது குறித்து பஞ்சாப் மாகாண காபந்து முதலமைச்சர் நக்வி, மூத்த டாக்டர்களுடன் ஆலோசனை நடத்தினர்.

    Next Story
    ×