search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    காலிஸ்தான் பயங்கரவாதி கொலையில் சீனாவுக்கு தொடர்பு?: பரபரப்பு தகவல்கள்
    X

    காலிஸ்தான் பயங்கரவாதி கொலையில் சீனாவுக்கு தொடர்பு?: பரபரப்பு தகவல்கள்

    • கனடாவின் உள்விவகாரங்களில் ஏற்கனவே சீனா, ரஷியாவின் தலையீடு இருப்பதாக குற்றச்சாட்டுகள் இருந்து வருகின்றன.
    • நிஜ்ஜார் கடந்த 2015-ம் ஆண்டு பாகிஸ்தானில் இயங்கி வரும் ஐ.எஸ். இயக்கத்திடம் ஆயுத பயிற்சி மேற்கொண்டார்.

    ஒட்டாவா:

    கனடாவில் கடந்த ஜூன் மாதம் காலிஸ்தான் பயங்கரவாத தலைவர் ஹர்தீப்சிங் நிஜ்ஜார் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இவர் இந்தியாவில் தேடப்பட்ட பயங்கரவாதிகள் பட்டியலில் இடம் பெற்று இருந்தவர்.

    இவரது கொலை பின்னணியில் இந்திய ஏஜெண்டுகளுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பரபரப்பு குற்றச்சாட்டுகளை பகிரங்கமாக தெரிவித்தார். இதற்கு கண்டனம் தெரிவித்த இந்தியா கனடாவின் குற்றச்சாட்டை மறுத்தது. இதன் காரணமாக இந்தியா-கனடா இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது.

    இந்த நிலையில் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் சீனாவுக்கு தொடர்பு இருப்பதாக தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது. கனடாவின் உள்விவகாரங்களில் ஏற்கனவே சீனா, ரஷியாவின் தலையீடு இருப்பதாக குற்றச்சாட்டுகள் இருந்து வருகின்றன. நிஜார் கொலையில் இந்தியாவுக்கும், கனடாவுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருவதால் இதன் மூலம் சீனா பலன் அடைய திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் நிஜ்ஜார் கொலையில் சீனாவுக்கு சம்பந்தம் இருக்கலாமா? என்ற சந்தேகமும் தற்போது கிளம்பி இருக்கிறது.

    நிஜ்ஜார் கடந்த 2015-ம் ஆண்டு பாகிஸ்தானில் இயங்கி வரும் ஐ.எஸ். இயக்கத்திடம் ஆயுத பயிற்சி மேற்கொண்டார். அவருக்கு சர்வ தேச அளவில் உள்ள பயங்கரவாத கும்பலுடன் தொடர்பு இருந்தது. மேலும் கனடாவிலும் காலிஸ்தான் ஆதரவு குழுக்களுக்கு அவர் பலமுறை ஆயுத பயிற்சி முகாம்கள் நடத்தி துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை கையாள்வது குறித்து பயிற்சிகளும் அளித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் தற்போது வரை இந்த கொலை யில் பல்வேறு சந்தே கங்கள் நிலவி வரு கிறது.

    இந்த சூழ்நிலையில் கனடாவில் நடக்க இருந்த இசை நிகழ்சியை ரத்து செய்து விட்டதாக இந்திய பாடகர் குருதாஸ்மான் அறிவித்துள்ளார். பஞ்சாபை சேர்ந்த புகழ்பெற்ற பாடகரான குருதாஸ்மான் இந்த மாதம் 22- ந் தேதி முதல் 31-ந்தேதி வரை சுற்றுப்பயணம் செய்து இசை நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டு இருந்தார். இதற்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்து விட்டது.

    தற்போது கனடா-இந்தியா இடையே உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் அவர் தனது இசை நிகழ்சியை ரத்து செய்து உள்ளார்.

    இதையடுத்து இசை நிகழ்ச்சியை காண டிக்கெட் வாங்கியவர்களுக்கு பணம் திரும்ப கொடுக்கப்பட இருப்பதாக நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து இருந்த நிறுவனம் தெரிவித்து உள்ளது.

    Next Story
    ×